இளமை தீர்க்க பாய்மரம் தவிக்குது

மல்லிகை பூவே
ஏன் 
இன்று இப்படி மின்னுகிறாய்?

இரு இலை வெடித்து 
கனுக்கள் துளிர்த்து 
மொட்டாய் வந்த பூச்சரமே 
ஏன் 
இன்று இப்படி மின்னுகிறாய்?

பரிசல் தோனியில் 
பாய் மரச்சாரலில் 
தேகம் குளிருது 
எந்தன் மயிலே தோகை விரிக்குது

மஞ்சள் பூசிய முகமோ 
அவள் அங்கத்தின் வளர்ப்பின் சுகமோ

மேலாடை இல்லாத 
பட்டாம்பூச்சி போல தேகம் சிலிர்குது 
உள்ளுக்குள்ள தாகம் தணிக்குது

யாரும் இல்லா ஓடையில 
நம்மை சுமந்து வந்த பாய்மரம் 
என்ன என்ன நினைத்ததோ 
எப்படி ஏங்கி தவித்ததோ.

உன் வாசனை திரவியம் 
நான் இதுவரை தீண்டாத ஓவியம் 
உன் வனப்பான கட்டழகு
நான் இதுவரை பார்க்காத காவியம் 

அன்பு மலரே 
அறுவடை தளிரே 
மஞ்சள் நிலவு போல உன்முகம் 
இஞ்சி சாறு போல உன்சுகம் 

உன் 
கைவிரல் தீண்டும் போதே 
என் 
உள்ளத்தில் கற்புரம் எரிகிறது 

என்னவளே
என் தீயை அணைத்து 
என் தேகம் குளிர ஓவியம் தீட்டு 
அந்த
ஓவியத்தில் உன் உயிரை ஒப்பனை செய் 
காதோரம் சாய்ந்து 
கவியோடு படர்ந்து
என் நிழலோடு வளர்ந்து வா 

என் 
நெஞ்சத்திலும் எண்ணத்திலும்
முழு நிலவு போல படர்ந்து வா.








No comments:

Powered by Blogger.