மேகமூட்டம்
முத்தம்மிட்ட இளம் காற்றே
வாழை தோட்டத்தில்
பவணி வரும் என்னவளை பார்
அவள்
காதோரம்
என் காதலை தீட்டு
என் அழகு சிலைக்கு
அபிஷேகம் செய்
உன் ஈர உதடுகளால்
அந்த சாரல் மழைத்துளியை தூவி
அவள்
தேகம் குளிர தொந்தரவு செய்
அவள்
கண்ணுக்குள் குத்தி நிற்கும்
அந்த கருங்கூந்தலை நீவி விடு
பட்டு புடவைக்குள்
மறைந்து கிடக்கும்
அவள் அங்கத்தின் அழகை
எந்தன் கருவிழிக்கு காவியமாய் காட்டு
சொர்கத்தின்
சூட்சுமத்தை என் விழிகள்
கண்டு களிப்பில் சொர்கத்தை நுகரட்டும்
உருவம்
இல்லா எந்தன் உயிரே
என் ஆசையை அவளிடம் தென்றலாக சென்று சொல்.
No comments: