தள தளனு நடந்து போறவளே

தள தளனு 
நடந்த போற புள்ள 
உன்னை கண்டதும் தாகம் ஏறுதடி 
எந்தன் உள்ளே!

உத்து உத்து 
பார்க்கிறயே புள்ள 
உள்ளுக்குள்ள தாகம் ஏறுதடி புள்ள 

மத்தி மீனாட்டம் 
உன் புறவம் கத்தி முனையாட்டம் கிறுதடி 

உத்தராகண்டம் யுத்தமடி 
நித்தம் உனக்கும் எனக்கும் சத்தமடி 

சத்தம் இல்லாமல் 
உன் மடி மீது சாயா 
யுத்தம் இல்லாமல் 
ஒரு யுகம் உன்னோடு வாழவா 

செவ்வரளி போல இதழகி 
செந்தூரம் சிவப்பாட்டம் பேரழகி 

மஞ்சு விரட்டு
காளை யாவும் 
மசக்கையில கிடக்குதாம் 
மல்லி கொடி 
முன்னழகு காண தவமாய் கிடக்குதாம் 

வெள்ளரிக்காய் இடையழகி 
வெம்பூநீர் நடையழகி 
உன் தங்க அழகுக்கு 
பதக்கம் ஒன்னு நான் தரவா 
உன் இமைக்கும் கருவிழிக்குள் 
காதல தான் வரைந்துவிடவா 

பொக்கிஷம் 
பொண்டாட்டி 
புயல் வீசும்
வம்பாட்டி 
முக்கூடல் 
இணைவு போல 
உன் சிரிப்பு 

முத்து பவளம் போல 
உன் அழகு 

பொத்தி வைத்து 
முயல் போல நடப்பவளே 
என்நெஞ்சு முடிக்குள்ள 
மயில் போல படுப்பவளே 

உன் 
கண்ணோர சாரல் மழை 
என் நெஞ்சோரம் நனைக்குதடி.
உன்
பிஞ்சு விரல் மீது என் சாயல் 
மத்தி வெயிலாட்டம் சாயுதடி 

கோடைமழை 
கொட்டி வரும் வேளையிலே 
தேகத்துக்கு தடுப்பாட்டம் வந்தவளே 

மஞ்சள் நீ பூசடி 
மரிக்கொழுந்து சூட்டடி 
பிஞ்சு பூவுக்கும் புணர்ச்சி விதி கூறடி 

மண்ணு மதிழ்களுக்குள் 
மறைந்து நின்னு கதைப்பமா 
தீராத வெப்பத்தை திறை நீக்கி கலைப்பமா 

கொட்டுதடி 
வேர்வையாவும் உடல் எங்கும் 
மலர்ந்து நிக்குதடி மொட்டு இப்ப பூவாட்டம் 

அள்ளிக்கொடியே 
அரச நாட்டு மயிலே 
பத்து விரல் 
கொணர்ந்த கூந்தலுக்குள் 
உடல் தீயின் வெப்பம் தெரியுது 
ஒத்த விரல் 
புரட்ச்சிய தான் நித்தம் செய்யுது 

நெஞ்சோடு 
அணைக்கும் போது 
நிலா போல இருப்பவளே 
பால் இல்லாமல் தயிர் உண்டா 
நீ இல்லாமல் நான் உண்டா 

ஓடிவாடி 
அள்ளிக்கொடி 
பாடி வாடி 
தங்கக்கொடி 
உன்னை  நினைத்து 
நிம்மதியில் வாழ்கிறேன் 
உன்னை அணைத்து
குடும்பம் யென்னும் 
சன்னதியில் வாழ விரும்புகிறேன்.







No comments:

Powered by Blogger.