சந்திரன் தெரிய
முந்தி வந்த என் இதய நிலா..
உள்ளத்தின் ஓரத்திலே
பள்ளத்தின் பதிகையாக
உன் அழகின் அலங்காரம்
சமையல் அறையில் சிவப்பு கம்பளம் விரிக்குதடி
தாகத்தோடு
பறந்த வந்த பறவை போல்
என் செழிப்பான தேகம்
உன் மீது மோகம் கொள்ள
மெல்ல நகர்ந்தது என் பாதங்கள்
அலமாரியில்
அழகாய் அமரந்த
சீரகம் சிரிக்க
கடுகு வெடிக்க
மற்ற கூட்டாளிகள் யாவும்
மெல்ல சினுங்க
சித்திரை நிலவு போல
செந்தமிழ் சுவையை போல
கண்ணோரம் மை பூசி
கருமை நிற உடை பூட்டி
சித்தமள்ளி பூ வாட்டம் மெல்ல சிரிப்பவளே.
குளிர்சாதன பெட்டி ஓரம்
மயில் சிறகு விரித்து நிற்பது போல
புன்னகை பூத்து நிற்பவளே
உன் உள்ளத்தின்
சூதாட்டம் நான் அறியேன்.
வஞ்சை பூவழகி
வனப்பான பேரழகி
உன் கண்கள் காட்டும் சமிக்ஞை நான் அறியேன்.
நெருங்கி வரும்
பெண் எனும் பேரழகே
அள்ளி பருகவா
ஆசை தீர அணைக்கவா
உன் பிஞ்சு இதழுக்கு
என் இதழ் சாயம் பூசவா
மீசை இல்லா ஓவியமே
என் வாழ்வின் காவியமே
தாகம் தீர்க்க
தண்ணீர் தேடினேன்
உன் இதழ் நீர் கொடுத்து
ஏன்
என் இரவை
பசுமை ஆக்கினாய்.
No comments: