தூரத்தில்
துவ்வானம் வீசும்
ஈரத்து இளவரசி
உன் வாசனை மூச்சு குழாய்யில்
முன்னே பாயுதடி.
அங்கே
நீல வானம் சேலை விரிக்க
நித்திரை தொலைத்த முழு நிலவு
மடிசாய துடிக்க.
பொங்கி வரும் அலைநீரும்
தன் பக்கத்திற்கு பிறண்டு படுக்க
தலையணை இல்லா
கட்டிலிலே
தவித்த நிலவும் உறங்குதடி
வாழை தண்டுக்கு
கொழுசு பூட்டி ஓய்யார கொண்டைக்கு மலர்கள் சூட்டி
பெண் வாடை வீசுதடி
பூங்கதிரே பொண் மேனி வாடுதடி
நீ மஞ்சள் பூசையிலே
பூக்குதடி பூஞ்சோலை
புஞ்சை நிலம் பூக்கனுமே
பூவே நீ செவி கேளு.
No comments: