செவ்வானம்
பூத்து நிற்கும்
வெள்ளி நிலா
காத்து நிற்கும்
வெண்மேகம் பூடைச்சூழ
பெண் மேகம் வருகிறாள்
தூரத்தில்
குயிலாக தெரிவாள்
நெருக்கத்தில்
மயிலாக தெரிவாள்
குடும்ப தலைவி என்பதை
அவள் குதித்தே பறைசாற்றுவாள்
போர்வாள்
கொடி வாள் போல
அவள் கழுத்து
அதை சுற்றி நாட்டியம் ஆடும்
மஞ்சள் கயிறு
வெண்
பொங்கல் போல
அவள் கண்ணம்
பொங்கலில் கிடக்கும்
குறுமிளகு போல
அவள் மச்சம்
உத்தாணி காரிக்கு
ஒய்யாரமான உடம்பு
அவள் சிட்டாய் விழகுமா என்று
சிட்டுக்குருவி ஏங்கி தவிக்கும்
வனப்பான
அழகுக்கு
சொந்தகாரி
என்னை
அனுதினமும் ஆட்டி விக்கும்
அழகு ரதி
அய்யோ
அவள் பொண் பாதம்
பொங்கி வரும் அழகைப்பார்
அவள் இடை ஆடிவரும்
இடஞ்சுழியின் அழகைப்பார்
அவள் நெத்திக்கும்
நெஞ்சுக்கும் துள்ளி குதிக்கும் தாழி கயிறைப்பார்
பிரம்மன்
படைப்பில் சிறந்த ஓவியம்
சிகை பூட்டி வருவதை பார்
கண்ணால்
அவள் அழகை
கண்டு ரசிக்க கலியுகம் போதாதே
மீண்டும்
ஒரு பிறவி கொடு பிரம்மா
அவளை நான் மிச்சம் இன்றி ரசித்து தீர்க்க வேண்டும்.
No comments: