தாமரை மொட்டு இதழகி

சில்லுனு 
வீசும் காத்து 
காதல் சேதியைய் தான் சொல்லுது

சிவந்த 
அவள் நிறத்த நோக்கி 
மனம் சிறகடித்து பறக்குது.

மஞ்சள் பூசும்
மரிக்கொழுந்து மடல் அழகி 
கண்ணாலே ராகம் மீட்டுறாள் 

கள்வன் 
என் நெஞ்சத்தை 
காதல் தீயில் வீணை மீட்டுறாள்.

சட சடனு 
வளர்ந்த புள்ள சட்டென்று 
பார்க்கையிலே 
தக தகனு 
தாகம் எனுக்குள்ள எடுக்குது 

சட்டென்று 
இதய கதவு திறந்து 
காதல் பட்டாம்பூச்சி பறக்குது 

மெழுகு சிலைக்கு 
நிகரான தேகம் கொண்டவளே 
உன் மினு மினுக்கும் இமைகளும் 
இமைக்குள் கிடக்கும் விழிகளும் 
என்ன வரம் வாங்கி வந்ததோ 

வெள்ளை நிலா 
கொள்ளை போகும் மென்மையான அழகிடி நீ 

தாமரை 
மொட்டு இதழகி 
நீ மெல்ல
சிரித்தாள் பூக்களும் விரியும்
நீ குலுங்கி
சிரித்தாள் மொட்டுக்கள் சிதறும் 

உன் 
பரவச பார்வைக்கு 
பைத்தியம் ஆனவன் நான் 
காதல் வைத்தியம் தேடி அழைகிறேன் 





No comments:

Powered by Blogger.