அறிவாய் நீயும்
அன்பாய் நீயும்
அசைந்து ஆடும் நேரம்
இளைப்பாறும் தேகம்
கண்
முன்னாடி நீயும்
கவிப்பாடும் நேரம்
பொண் மேகம் வந்து
துவ்வானம் போடும்
அழகு மலரே
என் அறுசுவை உணவே
உன்னோடு கண்ணம்
புன்னாக கூடும்
அசைந்து
ஆடுவது
மரமோ செடியோ
காற்றாய் வருவது
உன் காதல் தான்
ஈரம்
சொட்டும் இரவின்
பனியில்
ஊர்ந்து போவது
வண்டோ மனமோ
யாதும்
அறியாத நிலையில்
சித்தன் ஆனேன்
உன் ஈரம் அறிந்து
ஞானி ஆனேன்
ஆட்டி
படைப்பதது
ஏதும் இல்லை
அழகு ரதியின் வாசம் தான்
பூக்களின்
வாசம் நாசியை தொலைக்கும்
புன்னகை
வாசம் வாலிபத்தை தொலைக்கும்
போதும் போதும்
என்று கெஞ்ச தோன்றும்
ஆனாலும்
அவள் மீதான காதல்
அந்த மழைநீர் போல
கொட்டி தொலைக்கும்
அழகாய் அவளும்
அன்பாய் நானும்
அந்த ஆதாம் ஏவாள் போல
வெள்ள நீர் மீது மிதந்து கிடக்க
தவளை தாலாட்ட
பரணி சீராட்ட
பை குழள் மீனும்
பாசத்தை தீ மூட்ட
இயற்கை தந்த
இன்ப வாழ்வில்
இனிதே தொடர்ந்தது
எங்கள் வாழ்க்கை.
இயற்கையோடு பயணிப்போம்
இளைப்பாறும் போது தரிசிப்போம்.
நன்றி வணக்கம்.
No comments: