குறுங்காடு
புதர் மீது பூ வாசம் வீசுது
செங்காடு
தடி மீது தேன் வாசம் வீசுது
மாந்தளீர்
மேனியாய் மணக்கும் சந்தனமாய்
வெள்ளி சரிகை போத்தி
விடலை குட்டி துள்ளி குதிக்கையில
பறம்பு
இரண்டு ஆடி அடங்குவதா
அய்யோ
காட்சிக்கு நீட்சியாக
மங்கை மனம் பூத்து சிரிக்க
பொங்குதே தேன் அமுது உள்ளத்தில்
அது வலிந்து ஓடுதே என் கண்ணத்தில்.
மாசி மாதத்தில்
கடுங்குளிர் தேகத்தில்
சட்டென்று சுட்டு போகும்
அவள் கைவிரல் சூடு
உச்சி தலையில்
ஒரு பிசுக்கு பிசைய
குண்டழ சக்தியும் குபீர் என்று
அவள் காதல் குளத்தில் குளித்திட
வெள்ளை வேட்டிக்கு
விடுமுறை அளித்து சமதான கொடியாய் காற்றில் ஆட
உச்சி தலை முதல் உள்ளம் கால் வரை
உறக்கத்தில் கிடக்குது என் மனசோ அவள் கிறகத்தில் கிடக்குது.
No comments: