கணவன் மனைவி உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?



எங்கோ 
பிறந்து உனக்காக வந்தவள் 
உந்தன் 
உள்ளத்தில் ஓரமாய் இனிப்பவள் 

பரவசப்படுத்தடும் 
பழந்தமிழ் அழகி 
பால் வடியும் புன்னகை அழகி

நித்தமும் 
உன்னுள் காதல் பீச்சும் இளவரசி 
இவளே 
உன் வாழ்வின் துணைவி 

இவளை நீ எப்படி காதலிக்க வேண்டும் தெரியுமா?

அதிகாலை உறக்கத்தில் 
அன்பாய் ஒரு அரவணைப்பு 
அவள் நெற்றியில் அழகாய் ஒரு முத்தம் 

நாள் முழுவதும் 
உழைத்து தூங்கும் அவளுக்கு 
நீ கொடுக்கும் பாசம் தானே 
மருத்துவம்.

கணவன் மனைவி உறவு என்பது 
கடலும் கடல் அலைகள் போன்றது 
ஒன்றை விட்டு ஒன்று விழகாது 

அழகாய் 
நித்தமும் அவள் மீது பாசத்தை அடுக்கு 
அவள் அரியாத உலகத்தை அவளிடம் காட்டு 
அவள் கைவிரல் பிடி 
இழுத்து செல் புதிய உலகத்திற்கு 
அவள் 
புதிதாக மலர்ந்தது பூவாய் 
மலர்ந்து நிற்பாள் 

அவள் 
குழந்தை போன்றவள் 
சற்று நேரம் ஒதுக்காக விட்டாள் 
கொடுறமானவள் 

உங்கள் இருவரின் 
கோவத்தை மண்டியிட்டு அமர்ந்து மண் தொண்டி மூடுங்கள் 

காதல் 
அந்த மண்ணின் மீது பூக்கட்டும் 
அழகியல் நிறைந்
த 
புது வாழ்வு உங்கள் இல் வாழ்வில் பூக்கட்டும்.


No comments:

Powered by Blogger.