எங்கோ
பிறந்த என் உள்ளத்தின் நாயகி
என் மனைவி
என்
அன்பு எனும் கூட்டில்
அழகாய் வந்து தங்கியவள்
என் மனைவி
என்
வாழ்வில் என் நிதர்சனம்
அறிந்தவள்
என் மனைவி
பூக்கும்
பூக்களை போல் அவள் சிரிப்பாள்
கோவம்
வந்துவிட்டால் பூதம் போல் ஆட்டிவிப்பாள்
அழகுக்கு
மைபொட்டு வைத்தது போல
அவள் சிவந்த முகத்திற்கு பொட்டு இந்த கோவம்
ஏனோ
முன்பு எல்லாம் வாரம் ஒருமுறை வரும் கோவம்
இப்போது எல்லாம் நிமிடத்திற்கு மூன்று முறை வருகிறது.
பட்டினத்தார்
பேத்தி என்று கொழுப்பு அவளுக்கு
திட்டும் போது மட்டும்
செந்தமிழில் திட்டுகிறாள்
பாவலரேறு
வம்சத்தில் வந்தவன் நான் என்பதை மறந்து விட்டால் போல
அவள்
சங்கு கழுத்தில்
வட்டமிடும் வனப்பான மஞ்சள் கையிறு
நான் பூட்டியது
என்னை விட
அவளிடம் அதிகம் தஞ்சம் புகுந்தது
அந்த கயிறே.
நான் எங்கே
இருந்தாலும் அவள்
எனக்கானவள் என்று உறுதி செய்த
கயிறு.
என் வம்சத்தின் நீட்சிக்கு உறவான கயிறு
நான் கட்டிய தாழி கயிறு.
No comments: