செந்தமிழ்
நாட்டில் தேன் சூட்டும் கூட்டில்
மஞ்சு பூத்து நிற்கும்
மானே உன் பார்வை மொழியோ
மடிசாய காத்து நிற்கும்
வண்ண உடை சூட்டி
மத்தாப்பு பூச்சூட்டி
ஆத்து நீர் ஓடையிலே
உன் இடையோ ராகம் மீட்டும்
தவளையும் மீனும் தாகத்தில் தவிச்சு நிற்கும்.
சந்தன
வாசனையோடு
தரணியில் நீ நடந்து வர
சந்தை எங்கும்
குயில் ஓசை கேட்குமடி
மெல்ல வா
பொண் மகளே
இந்த பூமியும் உன் பொற்பாத்தை
சிறுது நேரம் கொஞ்சட்டும்
அழகுக்கு அழகு சேர்க்கும்
கருவேப்பிலை போல நீ இருக்க
உன் கண்ணழகே ஓன்றே
சாட்சியும் நீட்சியும்
பரிசல் ஓடையில்
நகர்ந்து செல்லும் நிலவு போல
என் நெஞ்சை தட்டி இலுக்குற
என்ன என்னதாண்டி செய்ய நினைக்குற.
No comments: