அழகாய்
நீயும் போகையில
அன்ன மயில் கூவுதடி
மந்தார பூவும்
மனசை விட்டு பேசுதடி
அடி
பூங்குழலி
என் பொன்
மாமாவின் பொக்கிஷமே
பூத்து நிற்கும்
வெந்தாரை சித்திரமே
நீ
நடந்து போனால்
ஈர மண்ணின் சோகம்
வெப்ப சலனமாய் எரியுதடி
நீ
சிரித்து போனால்
சோகம் கூட பூந்தென்றலாக
என்னை வந்து தீண்டுதடி
முல்லு மேல்
பூத்து நிற்கும் பூவ போல
என்னுள் நீயும் பூக்கிறாய்
நித்தம்
வரும் மூச்சு காற்று போல
என்னுள் பாய்கிறாய்
அழகு
ரதியே
உன் வண்ண முகத்தை
நித்தம் பார்க்க சூரியன் வருவான்
உன்
சங்கு கழுத்தின் அழகை
காண சந்திரன் வருவான்
அழகே
நீ என்னை
கடந்து போகையில
என் அடி மனசு
உடைந்த முல்லாய் போகுதடி
மனமோ
மனசை பிடித்து கசக்குதடி
மறு தினமும்
உன்னை பார்க்க துடிக்குதடி
அழகே
நீ ஆறுதல் படுத்த வருவாயா
என்
ஆசை புரிந்து கண்ணோரம்
காதல் ஒளி வருவாயா
அன்பே
பூந்தென்றல் காற்றே
நான் விடும் காதல் பட்டம்
உன்னோடு சேரட்டும்
இவ்வுலகில்
செழித்து நம் காதல் வளரட்டும்.
No comments: