தென்றல்
காற்றோடு பேசிக்கிட்டு
தெற்கால போறவளே
தென்னை
ஓலை ஒன்னு
எட்டி உன்னை பார்க்குதடி
குட்ட
ஆடைபூட்டி
குதிச்சு நீ போகையிலே
மத்தி மீனும்
மல்லாக்க பாயுதடி
ஊர் யாவும்
பெண்கள் இருக்க
நீ மட்டும்
என் உள்ளத்தில்
சாய என்ன காரணம்?
உன்
மூக்குத்தி அழகுக்கு
அந்த கோபுரமே சாயும்
நான் மட்டும் சாய கூடாதா?
நீ
இனிப்போ
கசப்போ எனக்கு தெரியாது
பெண்ணே
நீ இல்லாமல் நான் இல்லை என்பது
உனக்கு புரியாது.
தெற்கே
நீ போகையில
தென்றல் காற்றில்
ஈட்டியாய் பாய்கிறது
உன் பார்வை என்மீது
உன் பார்வையில்
நான் நித்தமும் சாம்பல் ஆகிறேன்.
ஆலமர
நுனி கிளையில்
பழுத்து நிற்கும் பழத்தை
பள்ளுபடமா ருசி பார்க்கும்
குருவி போல
குருதியின்
குகைக்குள் சிக்கி தவிக்கும்
என் இதயத்தில்
பூத்து குலுங்குதடி உன் காதல்
ஆலயத்தின்
குகைக்குள் காதல் கீதம் பாடும்
பறவைகள் போல
ஆயிரம் கால்
மண்டபத்தில் நாம் அமர்ந்து பேசலாமா!
No comments: