கணவன் மனைவி இருவரும் இடையில் நடக்கும் ஊடல் கவிதை



ஆண் : 

வெண்மேக பூ நீ
வெடித்து நிற்கும் பஞ்சு நீ
நெருங்கி வரும் வேளையிலே 
பதற வைக்கும் நெருப்பு நீ 

பெண்:

அழகான கொல்லன் நீ
அழகுப் படுத்தும் கம்பன் நீ
சுட்டு எரிக்கும் பார்வையிலே 
என்னை இழுக்கும் வில்லன் நீ 

ஆண் : 

தூரல் இது சாயாது 
மணலும் இங்கு வாழாது 

பெண் : 

தூரம் அது இல்லாது 
காதல் இங்கு வாழாது.

ஆராரோ ஆராரோ 
ஆரிரரோ ஆராரோ 
ஆராரோ ஆராரோ 
ஆரிரரோ ஆராரோ 

ஆண்:

ஓசையிலே
நீந்தி வரும் பெண்ணழகே 
உன் நெருக்கம் என்னை இழுக்குதடி 
பூவழகே.

பெண்:

ஆசையிலே தேடி வாரன் 
கருப்பழகா உன் மீசையில மோத வாரேன் பூவழகா 

ஆண்:

நெஞ்சமேனும் பூஞ்சரத்தில் வந்தவளே 
உன் காதல் மோகம் தீ மூட்டுதடி பூங்குயிலே.

பெண்:

ஆசையில தேரு பூட்டி வந்துருக்கேன் 
உன் ஆண்மையோட மல்லுகட்ட காத்து இருக்கேன்.

ஆண்:

சோலையிலே சேலையைத்தான் பிடிச்சிருக்கேன்
நீ சேதி சொல்லும் நாளுக்குத்தான் காத்து இருக்கேன்.

பெண்:
காத்து இருந்து கைபிடிக்க போறவரே 
உங்கள் வாசம் வீசும் சோலையிலே மாட்டிக்கிட்டேன் நான் மாட்டிக்கிட்டேன்

ஆண்:

உன்னோடு வாழ தாண்டி 
ஆசைப்பட்டேன் 
உன்னிடம் நெருங்கும் போது ஏத்துக்கடி 
மானே ஏத்துக்கடி.



No comments:

Powered by Blogger.