அவள் அழகின் மழை முகில் | Tamil romantic kavithai

அதிகாலை உறக்கம் 
அழகு தீட்டும் கூந்தல் 
கொக்கறிக்கும் கோழி
றெக்கை விரிக்கும் பறைவகள்
இது போதும் எனக்கு.

மஞ்சள் பூசிய தோல் 
அழகு நிலவு போன்ற பொட்டு
கைவிரல் இடுக்கில் 
வெப்பத்தின் கதகதப்பு 
இது போதும் எனக்கு..

மெளனமான பேச்சு
மனசை மயக்கம் பார்வை
முத்துப்போன்ற சிரிப்பு
முந்தானையில் தாலாட்டு 
இது போதும் எனக்கு..

இதழோடு இதழ் விரித்து 
இமைகளுக்கு விடுப்பு கொடுத்து
அசையாத ஓவியத்தை 
அவள் அனுமதி இன்றி அளவு எடுத்து 
இளைப்பாறும் சுகம் 
இது போதும் எனக்கு...

கண்ணோரம் 
புன்னகையும் 
கழுத்தோரம் நீர்த்துளியும் 
நெஞ்சோரம் அவ சாய
வேர்த்து கொட்டும் நீர்த்துளியும் 
இந்த ஜென்மத்தில் 
இது போதும் எனக்கு..

அழகுக்கு அழகு சேர்க்கும் 
அந்திவான வென்நிலவே 
உன் பார்வையின் அழகும் 
உன் புன்னகையின் வெளிச்சமும் 
இந்த உலகில் நான் வாழ போதுமடி.
அது நித்தமும் கிடைத்தால் நான் தான் 
வெற்றி நாயகனடி.





No comments:

Powered by Blogger.