தொட்டியில்
உறங்கும் என் உயிரே
மெல்ல தவழ்ந்து வா.
வெள்ளை
அடித்த மதில் சுவரை
இறுக்கி பிடித்து வா.
பட்டொளி வீசும்
பால் சிரிப்பை
மெல்ல உதிர்த்து வா.
உன் அங்கத்தில்
அனையாத ஆடையை
கையில் பிடித்து வா.
உன் புன்னகை
சத்தத்தை மின்னல்
வேகத்தில் ஒளித்து வா
ஆசையோடு
ஓடிவந்து என் பாவடையை பிடிச்சுக்க
உன் அடிவயிறு பசி தீர
என் அங்கத்தின் இரத்தத்தை உறிஞ்சிக்க.
நான்
பெற்ற மகளே
நீ யே என் உலகம்
என்
அணுக்கரு இணைவு
தந்த பரிசு நீ
என்
இரத்த நாளத்தில்
பூத்த சிசுவு நீ
என்
இதயத்தின் துடிப்பே
என்
மகிழ்ச்சியின் வெடிப்பே
என்
கருவறையை உடைத்து
என்
கைரேகையில் தவழ்ந்தவளே
மலடி
யென்னும் சொல்லை
தொப்புள் கொடியில் வைத்து அறுத்தவளே
ஓடி வா
என் மயிலே
உன் தாய் மடியில் தவழந்து
இந்த தரணியில் உன் தாய் பெயரை சொல்லி என் வாழ்வுக்கு உரிமை கொடு.
உன்
தாய் ஆகிய எனக்கு உன் கையால் மகுடம் கொடு.
No comments: