மங்கை
ஒருத்தி மனம் உருகி
மயிலை துணைக்கு அழைத்து
பொங்கு தமிழ்
வரிகள் கோர்த்து
பதும மலர் வாசம் தீட்டி
மாது அழுதாள்
நங்கை அழுதாள்
மனதின் வலியை
மயிலின் தோகையோடு சொல்லி அழுதாள்.
ஆயிரம்
வலிகளை மட்டுமே
அனுதினமும் கண்டவள்
கதறி அழுதாள்
கலங்கி நின்றாள்
தொட்டு பகிர தோள்கள் ஈன்றி
துடித்து அழுதாள்.
அய்யோ
இவள் குறையை நிவர்த்தி செய்ய
இந்திரன் வருவானோ?
இவளின்
கண்ணீரை துடைக்க சந்திரன் தான் வருவானோ?
பெண் யென்னும்
பேரழகி இங்கே கலங்கி நிற்கிறாளே
ஆறுதல் சொல்ல
இப்பிரபஞ்சத்தில் யாரும் இல்லையோ.
என் உள்ளத்தின் வரிகள்
மட்டுமே இவளுக்கான ஆறுதலோ.
No comments: