உன்னை கண்ட என் கண்களுக்கு எப்போ தாண்டி மோட்சம்



பஞ்சு 
மெத்தை போல இருப்பவளே 
பண்ணீர் 
பூவப்போல சிரிப்பவளே 

அலுங்கி நீ நடக்க 
ஆடுதடி பூங்கரகம் 
குலுங்கி நீ சிரிக்க 
பூக்குதடி தேன்கரகம் 

மெல்ல நெருங்கி வா
மோகத்தீய தீண்டி வா
தென்றல் காற்றுப்போல 
மேனியாவும் குளிர்ந்த வா 

கையோடு கை பிடிக்க 
காத்து கிடக்கும் காலம் யாவும் 
மெய்யோடு நீ நடக்க 
மெய் சிலிர்த்து கிடக்குதடி 

மத்தாப்பு ஓளியே 
என் மனசை ஆளும் ரதியே 
இரவெல்லாம் 
உனக்காக ஏங்குதடி குயிலே 
இனிப்பான உன் ராகம் 
இவ்இரவும் கேக்குதடி மயிலே...

தாகத்தை 
தூண்டும் தாவணி நடையழகி 
மோகத்தை 
தூண்டும் முத்தான பேரழகி 
சிட்டுக்கள் பறப்பது போல் 
அங்கும் இங்கும் ஓடாத 
சிவந்த எம் மனச 
ஆடை யென்னும் சுவர் எழுப்பி 
தடுக்காதே!

நான்
சுவாசிக்கும் 
மூச்சே நீ தானே 
நான் 
வாசிக்கும் 
புத்தகம் நீ தானே 

ஓவ்வொரு 
பக்கத்திலும் ஓராயிரம் 
பேரானந்தம் 

அவற்றில் 
சில பக்கங்கள் இனிக்கிறது 
சில பக்கங்கள் முறைக்கிறது 

அழகியல் 
ஓவியம் போல
அங்கே இங்கே 
சில பக்கங்கள் அழகாய் ஜொலிக்கிறது 

அங்கும் இங்கும்
சில மேடு பள்ளங்கள் 
அன்பாய் ஏன்டி அணைக்கிறது.

தோகை 
விரித்து ஆடும்
மயில் போல துள்ளி நீ குதிக்குற.
பேரிடர் இடி போல 
சில நேரங்களில் மின்னுற.

வலையலில் 
ஓசை மீட்டும் 
நடமாடும் மத்தாளமே 
ஒருபுறம் நான் இசைத்தால் 
மறுபுறம் ஆடுகிறாயே ஏனடி?

யாரோ 
ஒருவன் தீட்டிய 
ஓவியம் போல செழித்து வளர்ந்து கிடக்கிறாய் 
உன் புத்தகத்தில் 
இல்லாத புதிரும் இல்லை 
புதிர்களை வருடாத 
என் விரல்களும் இல்லை 

பொம்மை போல 
கிடக்கும் பொக்கிஷமே 
புணர்ச்சி விதிகளுக்கு 
பகுபத இலக்கணம் ஏழுத 
எனக்கு ஒரு வாய்ப்பு தருவாயா?

உன் புத்தகத்தில் 
என் மையிட்ட எழுதுகோல் 
முதலும் முடிவும்மாக இருந்துவிட்டு போகட்டுமே!


தாகம் தீண்டிய 
தேகத்திற்கு தண்ணீர் தான் மோச்சமடி
உன் புத்தகம் தீண்டிய 
என் கண்களுக்கு எப்போ தாண்டி மோச்சம்!












No comments:

Powered by Blogger.