காதலியின் கண்ணீர் துளி கவிதை


காகித
கப்பல் இல்லை நான்
உன் கண்ணீர் துளிகள்..

ஓவியமாய்
என்னை தீட்டி 
காதல் எனும் பெயரை சூட்டி
நடுத்தெருவில் 
என்னை விட்டு சென்ற கயவனே 
நான் தான் 
உன் காதலி எழுதுகிறேன் 

வாசமுள்ள பூ என்றாய் 
தங்ககட்டி என்றாய் 
தாழம்பூ மேனி என்றாய்
நானே உன் உயிர் என்றாயே 
இப்போது ஏன் என்னாயிற்று?

வாசமுள்ள பூ வாடிவிட்டதா 
தங்ககட்டி கரைந்து விட்டதா
தாழம்பூ மேனி புளித்து விட்டதா
பதில் சொல்லடா!

ஆசையாய் 
உன்னை பார்த்து 
குறிஞ்சி பூ போல 
உன்னோடு காதல் வளர்த்து 
ரெட்டை கிளிப் போல் 
நீ அழைத்ததும் உன்னோடு 
சுத்திவந்தனே 
அதுக்குத்தான் 
என்னை நடுரோட்டில் விட்டுச்சென்றாயா?

உன்னை 
உருகி உருகி காதலித்ததை விட
வேறு ஏதும் துயர் நான் செய்யவில்லையே..

நீ அலைபேசியில் 
அழைக்கும் போது எல்லாம் 
சிட்டுக்குருவி போல சிட்டாய் 
எடுப்பேனே..
ஏன் 
நான் அழைக்கும் போது மட்டும் 
நீ எடுக்க மறுக்கிறாய்....

வார்த்தைகளை 
அழகாய் அடுக்கினாய் 
அதன் மீது காதல் எனும் வலையை வீசினாய் 

அந்த வலைக்குள் 
நானே ஆசைப்பட்டுதானே 
வந்து விழுந்தேன் 
பிறகு 
ஏன் என் கழுத்தை அறுத்தாய் 

நீ அழைத்ததும் 
ஓடி வந்தேன் 
உன் அருகில் அமர சொன்னாய் 
நானும் அமர்ந்தேன் 

முதலில்
என் கையை பிடித்து 
முத்தமிட முயற்சி செய்தாய் 
நான் தடுத்தேன்..

கையில் 
காலில் விழுந்து
மீண்டும் கேட்டாய் 
என் உள்ளத்தில் தயக்கம் 
இருந்தாலும் என் காதலன் நீ 
என்று நினைத்து தானடா 
உனக்கு அனுபவிக்க நான் இசைவு கொடுத்தேன்.

பின் ஏனடா 
என்னை நடுத்தெருவில் விட்டு விட்டு 
போய்விட்டாய்?

என் உடலில் பூத்த பூவும் 
அதை சுமந்து நிற்கும் நானும் 
நீர் இல்லா பாலைவனம் போல் 
நிற்கிறாய் நிற்கின்றோம் 

ஆனால் 
நீயோ
வேறு தோட்டத்தில் பூ பறிக்க 
மீண்டும் வலை வீசுகிறாய்.

பத்தி எரியும் 
என் அடிவயிற்றில் 
வெப்பம் தணியும் முன்பே 
நீ பட்டறிவு பெற்று வந்துவிடு 

உன்னை
நான் என் முதல் குழந்தையாய் எண்ணி மன்னித்து ஏற்றுக் கொள்கிறேன்.










No comments:

Powered by Blogger.