இளமையின் ரகசியம் அறிய என்னவளே வா தமிழ் கவிதை


இளமையை 
தொலைக்க என்னவளே 
என்னோடு வா...

காகித பேப்பர் 
சுமந்து வந்த காதல் கவிதைகளின்
நாயகியே 
அந்த கவிதை வரிகள் அழைக்கிறது
சற்று என்னோடு வா...

செவ்வானம் போல்
மிளிரும் செவ்விதழ் அழகியே
செங்கரும்பு அழைக்கிறது
சற்று என்னோடு வா...

மழைச்சாரல் போல்
மென்மையான தேகம் கொண்ட
இளம் மயிலே 
வண்ணங்கள் அழைக்கிறது
சற்று என்னோடு வா...

வாசல் கதவை போல்
செழுமை மிக்க கம்பீரம் கொண்ட
குறுந்தொகையே
வாடிய இலக்கியங்கள் அழைக்கிறது
சற்று என்னோடு வா...

கடலும் அலையும் போல
என்னோடு இணைந்து கொண்ட 
என் வாழ்வின் பிம்பமே
என் வாழ்வின் சுகம் அழைக்கிறது
சற்று என்னோடு வா...

பூவை மறைத்த கனிகள் போல
என் வரிகளை மறைத்த கவிதையே 
என் வாழ்வின் உணர்வு அழைக்கிறது
சற்று என்னோடு வா...


என் அழகான வாழ்வில் 
தங்கத் தாமரை போல ஜொலிப்பவளே 
என் நெஞ்சோரம் சாய என் உள்ளம் அழைக்கிறது 
என்னவளே என்னோடு வா.





No comments:

Powered by Blogger.