முடிவில்லா காதல் பயணம் ( Tamil Love kavithaigal) | love quotes

என் அன்பு உறவுகளே வணக்கம்,  

உங்கள் உள்ளத்தில் கவிதையின் துள்ளல் இருப்பதை இத்தளத்தில் நீங்கள் பயணிப்பதன் மூலம் என்னால் அறிய முடிகிறது.  

அதனால் தான் என்னவோ என் எழுத்தாணி முனை உங்களுக்கு கவிதை எனும் பரிசை கொடுக்க இந்த பக்கத்தில் உங்கள் வருகைக்கு காத்து இருக்கிறது.  

வாருங்கள் உறவுகளே, கவிதை காண்போம்.


பிரமிப்பான காதல் கவிதை

எழுத்தாளர்: கவிஞர் சிவா 



அறிமுகம்:

இந்த கவிதை ஒரு காதல் பயணத்தை விளக்குகிறது, அது நமக்கு உண்மையான காதலின் அழகையும் அதன் தொடர்ச்சியையும் காட்டுகிறது. கதிர் வெளியில் ஒரு பெண்ணின் அழகில் மூழ்கி, அந்த காதல் பயணத்தில் நாம் எத்தனை நெருக்கமாகச் செல்லக்கூடியோ, அது எவ்வளவு தூய்மையானது என்பதை உணர்த்துகிறது.


கவிதை:

அழகான

சிலைப்போல  

அசைந்து வரும் பெண்ணழகே  

உன் முகத்தை பார்த்தப்பொழுது  

அந்த முழுநிலவை ஆடையின்றி பார்த்த சுகம்.  


கிழக்கே

வெண் மேகமும்  

மேற்கே  

செவ்வானமும்  

நெருங்கி வந்து  

நிலவின் மீது முத்தம்மிட்ட  

அந்த கனம்  

நிலவு சிவந்து நிற்கும் அழகு போல  

என்னுள் நீ  

ஓசையின்றி ஊடுருவி  

காதல் ஒத்திசைவு செய்கிறாய்  


வெள்ளை நிற ஆடையிலே

பெண் ஒருத்தி  

அவள் தேவதைப்போல்  

ஆடை பூட்டி நெஞ்சோரம் சாய்கிறாள்  

மனசோரம் அமர்கிறாள்  


காதல் பயணத்தில்

முதல் ஆரம்பம்  

என் நெஞ்சோரம்  

சாய்ந்தவள் இப்போது மெல்ல நகர்ந்து என் மனச தொட்டு போகிறாள்  


இந்த பயணம்

எதில் முடியும் என்று தெரியவில்லை  

இருந்தாலும்  

இரு மனதும் பயணம் செய்கிறது  

காதல் எனும் இன்பத்தை தேடி.  


நகர துடிக்கும்

பட்டுப்புழுவுக்கு இறக்கை முளைத்தது போல்  

என் உள்ளம் அவள் மீது காதலில் பறக்கிறது.  


நிரந்தரமற்ற உலகின்

போலியான முதல் காதல்.  


உலகமே நிரந்தரம் அற்ற நிலையில்

நான் மட்டும் உண்மை காதல் என்று அவளிடம் சொன்னால் அர்த்தம் அற்றது  


எனவே

அவள் மீது வந்த காதலை  

அவளிடம் சொல்லாமலே  

அவளை மனதுக்குள் காதலிக்கிறேன்  

என் உயிர் உள்ளவரை 

அவள் மீதான காதல் உன்மையானது.


முடிவு:

இந்த கவிதை காதல் எனும் உணர்வின் அசல் அழகையும், அதன் நிரந்தரத்தன்மையை விவரிக்கிறது. வாழ்க்கையின் அவசரங்களில், ஒருவருக்கொருவர் உள்வாங்கும் அன்பும் நேசமும் தவிர்க்க முடியாதவை. காதல் ஒரு பயணமே, அது வாழும் போது மட்டும் உண்மையானது.  

நன்றி வணக்கம் 

No comments:

Powered by Blogger.