அறிமுகம்:
இந்தக் கவிதை, பார்வையின் ஒரு ஒற்றைச் சாயலில் நம்மை அள்ளி வீசும் காதலின் மாயத்தைக் குறிக்கிறது. அவள் நம்முள் விட்டு சென்ற ஒளியால் நம் உள்ளங்களில் ஓர் பவுர்ணமியை உருவாக்குகிறது. காதல் எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டும் இந்தக் கவிதை உங்களை வெகுவாகச் சிறப்பாக இணைக்கும் என நம்புகிறேன். வாசித்ததற்கு நன்றி!
காதல் நம் நெஞ்சை எப்படிச் சேரும் என்பது விளங்காத மாயம். இக்கவிதையில் என் நெஞ்சை உலுக்கிய ஒரு அழகிய காதலியின் பார்வை, நடைகள், அசைவுகள் அனைத்தும் எப்படி என்னை ஈர்க்கின்றன என்பதை விவரிக்கிறேன். வறண்ட மனதிற்கு அவள் பசுமை நிழலைக் கொடுப்பதைப் போல, அவள் வருகை என் உள்ளத்தில் ஓர் அழகிய பொழுதைப் பூக்கச் செய்கிறது. இந்தக் காதல் பயணத்தில் உங்களையும் என்னுடன் பயணிக்க அழைக்கிறேன்.
கவிதை:
கண்ணோரம் மை பூசி
காதோரம் தங்கம் பூட்டி
சிலு சிலுனு நடந்து வரும்
தங்கத்தேரே
உன் அசைவுகளும்
அது கொடுக்கும் உணர்வுகளும்
என் நெஞ்சோரம்
காதலை விதைத்து
மனசோரம் அறுவடை
பன்னுதே இது சரிதானா?
காய்ந்த பாலைவனம் போல்
கிடந்த என் மனச
உன் கண்ணாலே நீர் பீச்சி
உன் அசைவளே ஏறு பூட்டி
என் மனசை குறுவைக்கு தயார் செய்யும்
வயல் வெளிகள் போல
இப்படி பூட்டி
மிதிக்கிறியே சரிதானா?
அழகு
என்னும் சொல்லை
தன்னுள் அடக்கி ஆளும்
பெண் நிலவே
நீ மெல்ல நகர்ந்து
என் நெஞ்சோரம் வருவாயா?
ஒத்தையில
ஏங்கி தவிக்கும் என் தேகத்திற்கு
வெளிச்சம் ஒன்று தருவாயா?
கருவிழியால்
கிறங்க அடிக்கும்
காதல் மோகினியே
நீ என்ன வெள்ளி கோளின் பிம்பமா?
இந்த
மினுக்கு மினுக்குற.
நீ வீசிய
பார்வையாவும் ராக்கெட் போல
என் மீது பாயுது...
என் தேகத்திற்கு உன்னிடம் கேட்ட வெளிச்சம்
இப்ப என் இதயம் வர போகுதே
இது முறைதான?
உற்றோரே
உறவினரே
இவளை பெத்து வளர்த்த
மாமன் மாரே
அவளை சற்று ஒழித்து வையுங்கள் ஜயா
இன்று அம்மாவாசை.
கிழக்கே உதித்த சூரியனும்
மெல்ல நகர்ந்து மேற்கே மறைந்து விட்டது
அதன் பின்னர் வரும்
நிலவும் எங்கையோ மறைந்து விட்டது
ஆனாலும்
இவள் வீசும்
பார்வை வெளிச்சம்
எனக்கு பெளர்ணமியை
தருகிறதே
இது நியாயம் தானா?
ஜொலிக்கும் தேவதையே
உன்னோடு வாழ என் உள்ளம் ஏங்குது
அது
உன் கருவிழி சம்மதம் கேட்டு
என்னுள்ளே ஆடுது .
சிலை போல நீ இருக்க
பிதுங்கி வழியும் பப்பாளி பழம் போல நீ இருக்க
உன் தக்காளி கண்ணத்தை
எதைக்கொண்டு பரிக்க
உன் தடம் பதியா ஓடையிலே
எப்படி நீந்த
ஆயிரம் முறை அழகு வரிகளில்
உன்னை சிலையென வடித்து விட்டேன்
அன்பே
உனக்கு அபிஷேகம் செய்ய அனுமதி தருவாயா?
முடிவு:
இந்தக் கவிதை, பார்வையின் ஒரு ஒற்றைச் சாயலில் நம்மை அள்ளி வீசும் காதலின் மாயத்தைக் குறிக்கிறது. அவள் நம்முள் விட்டு சென்ற ஒளியால் நம் உள்ளங்களில் ஓர் பவுர்ணமியை உருவாக்குகிறது. காதல் எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டும் இந்தக் கவிதை உங்களை வெகுவாகச் சிறப்பாக இணைக்கும் என நம்புகிறேன். வாசித்ததற்கு நன்றி!
No comments: