காதல் மணம் பூத்த வாழ்வின் கணங்கள்
வாழ வந்தவளை நீ எப்படி ரசிக்க வேண்டும் தெரியுமா?
அதிகாலை
சூரியனை அழகு தென்றல்
தழுவி வருவது போல்
உன்னவளை இருகரம் கோர்த்து
வாழ்வில் நீ தழுவி நடக்க வேண்டும்.
உன்னை மட்டும்
நம்பி வந்தவளுக்கு நீ தானே முதல் குழந்தை, நித்தமும் அவளோடு அன்பாய் பாசமாய் பேசி விளையாடு.
அவள்
மகிழ்வை மட்டுமே
உன்னிடம் இருந்து நித்தமும் பரிசாக பெற வேண்டும்.
உறவுகளில் உன்னத உறவு
கணவன் மனைவி உறவு தான் என்பதை நீ ஒருபோதும் மறவதே.
ஆசையாய் அவள் கைவிரல் பிடி
அவளிடம் நித்தமும் அமர்ந்து பேசு
எங்கோ இருக்கும் நட்சத்திரம் நம் கண்முன் அதன் அழகை பிரதிபலிப்பது போல
நித்தமும் உன்னுள் இருக்கும்
ஒரு கோடி ஆசையை அவளிடம் பகிர்ந்து
அவள் மனதில் அழகு பிம்பத்தை உருவாக்கு.
ஆம்
வாழ்க்கை மேடு பள்ளம் உடையது தான்
இதை யாரும் மறுக்கவோ
இல்லை என்று சாதிக்கவோ முடியாது
மேடு பள்ளம் உடையது வாழ்க்கை என்று தெரிந்து தானே அவளை நீ கரம் பிடித்தாய்
பின்பு ஏன்
மனதில் ஜயம்
உன் கவலைகள்
உனக்கான தடையாக இருந்தால்
அதை தயங்காமல் அவளிடம் கூறு
அவளே
உன் கரங்களை பிடித்து
மேடு பள்ளங்களில் ராஜா நடை போடுவாள்.
வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும்
உழைப்புக்கான செல்வமும் புகழும் கூட வேண்டும் என்றால்...
உங்கள் உள்ளத்தில்
முதலில் காதல் பிறக்க வேண்டும்
அந்த காதல் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
இளம் தென்றல் காற்றோடு ஈரம் ஒட்டியது போல
இமயமலையில் பொழியும் பனித்துளி போல
அன்பாய்
அழகாய்
நேசமாய்
பாசமாய்
உங்கள் உள்ளத்தில் காதல் பிறக்க வேண்டும்..
தீண்டலும் தொடுதலும்
காதலின் உச்சமாக இருக்க வேண்டும்
அதை
நீங்கள் இருவரும் இல்லத்திலும் உள்ளத்திலும் நித்தமும் பிரதிபலிக்க வேண்டும்
அந்தரத்தில்
தொங்கும் வாழ்க்கை
உங்கள்
அகத்தில் பிறக்கட்டும்
வாழ்க்கை காதலில் செழித்து வளரட்டும்.
பாராட்ட நினைப்போர்
பாராட்டுங்கள்
என்னை தூற்ற நினைப்போர்
தூற்றுங்கள்
என் அன்பு உறவுகளே.
நன்றி வணக்கம்
No comments: