கருமேகத்தின் காதல் கனவு




கருமேகம் 

கூடுதடி கருங்குயிலே 

ஓடிவா....

இதுவரை 
நீ 
காணத ரகசியத்தை 
காண நீயும் கொஞ்சம் ஓடிவா...

மஞ்சள் பூசிவா 
மரிக்கொழுந்து வைத்துவா 
பிஞ்சு பாதத்தை பொத்தி வைத்து நடந்து வா...

கிழக்கே 
கூடிவரும் மேகத்தை பாரடி 
அந்த ஆகாய கங்கை நீர்த்துளியே நீயடி


ஓடிவா பொன் மலரே 

கொடுவா மீசைக்கு 
குறுக்கே கடக்கும் பள்ளம் போல 
வானத்தில் பாரடி பெறும் பள்ளம் 

வண்ண குயிலே
வசீகர உறவே 
உன் கைவிரல் தீண்டவே 
தவிக்குது என்மனசு 
அதை
தடுக்குது உன் முறைப்பு 

பச்சை நிற ஆடை உடுத்தி 
பாற்கடலை கடைந்து எடுத்த 
பச்சரிசி நெல்லு போல நீயும் ஜொலிக்குற 
என் மனச நீயும் யான் தாண்டி கொள்ளுற.

மசங்கி மசங்கி வரும் 
மேகத்தை பாரடி 
தயங்கி தயங்கி வரும்
என் ஏக்கத்தை பாரடி 

பட்டாம்பூச்சி போல 
உன் மீது சாயவா 
பருவம் வந்த பூந்தேனை 
மிச்சம்மின்றி உறிஞ்சவா 

வாடி 
வஞ்சிக் கொடியே
என் வாசமுள்ள ரோசாவே
என் வாழ்வுக்கு 
வசந்தம் வீச வந்த தென்றல் காற்றே 

உன் கண்கள் 
என்னை பரவசப்படுத்தடும்
உன் இமைகள் 
என்னை நிலைகுலைய செய்யட்டும் 

உன் அங்கத்தில் 
அழகு பொக்கிஷத்தை மறைத்தவளே
என் உள்ளத்தில் 
காதல் உணர்வுகளை பீச்சபவளே 

ரசனைகள் யாவும் 
ஊத்து நீராய் சுரக்குதடி
அதில் ஒன்று இரண்டு 
உன் பெயரை பாடுதடி 

கருமேகம் 

கரையும் முன்பே 
கார்குழலே வந்து விடு 
உன் கருவறையில் 
என் உயிரை உயிரோடு தாங்கிவிடு 

தயக்கம் என்ன தளிரே 
மயக்கம் என்ன மலரே

வா 
என் ஏக்கத்தை தீர்த்து 
என் அழைப்புக்கு ஈசைவு கொடு 
என் வாழ்வுக்கு உரிமை கொடு

தீராத ஏக்கத்தை 
தீர்ப்பவள் நீ தானே 
தென்றல் போல என்னை மயக்கும் மனைவியும் நீ தானே
வாடி 
என் மனசில் பூத்த பிள்ளையே.

வாழ்வோம் அந்த கருமேகம் போல.

No comments:

Powered by Blogger.