பேச தெரியாத பூவுக்கே
என்னை ஈர்த்து இழுக்கும் சக்தி இருக்கும் பொழுது
பேச தெரிந்த அவளுக்கு
என்னை ஈர்க்கும் சக்தி இருக்காதா..
அவள்
ராஜ வளநாட்டு பேரழகி
அவள்
தஞ்சாவூர் பட்டத்து இளவரசி
ஆம்
அவள்
என் ஆருயிர் காதலி
அவள் மெல்ல சிரித்தாள்
பாண்டிய நாடும் வெள்ளி உலா கானும்
அவள் குழங்கி சிரித்தாள்
சேர நாடும் தங்கரதம் ஏறும்
வானத்தை நோக்கி
கேள்வி எழுப்பி நின்று இருக்கும்
தரை நிழல் படாத தஞ்சை கோபுரமே
என்னவள் புன்னகைக்கு கை கொடுக்கும்
அவள் காதோரம் கவி படிக்கும்
போர்வாள் சிற்பங்கள் இடையே
புலித்தோல் அணிந்து வரும்
தமிழ் இனத்தின்
பட்டத்து இளவரசி அவள் தான்
அவள் கால் பட்ட
காவேரி நதி நீரும் நறுமணத்தில் ஜொலிக்கும்
ஒட்டாத தாமரை இலையில்
நதி நீரும் உட்கார்ந்து பேசிப் போகும்
அவள் கண்ணுக்குழி
நான் கண்டு தீண்டிய பொக்கிஷம்
அவள் கழுத்துக்குழி
நான் காணது ஏங்கி தவிக்கும் பொக்கிஷம்
அவள்
நொஞ்சோரம் சாய்ந்து
அவள் மனசோரம் பேச வேண்டும்
அதிகாலை நேரம் யாவும்
அவள் நினைவாளே பூக்கிறது
அவளோடு வாசனை தான்
என் இதழ்ழோட இனிக்கிறது
பொட்டு
வைத்த வெண்நிழவே
நீ ஒரு
அழகு நீர்வீழ்ச்சி
மெய் பேசும் மெய்யியல் அழகி
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
வளநாடு ஓரத்தில்
வந்து விடு பூங்குயிலே
வானத்தின் நீளத்தை நாம் இருவரும்
இணைந்து அளந்திடலாம்.
No comments: