
Introduction: இந்த பதிவில் அழகிய கணவன் மனைவி கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
Nov 6, 2024
கவிதை: பட்டாடை
அதிகாலை நேரம் எல்லாம் அனலாய் தவிக்கும் என் தேகத்திற்கு பட்டாடை அவள் தான்..
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: அசைவு
நேசிக்க துவங்கிய பிறகு அவள் ஒவ்வொரு அசைவுகளும் அழகானது.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: துணிவு
மெளனம் நிலவியது மூச்சு சத்தம் உலவியது கண் திறந்து பார்க்கும் முன் சந்தன வாசனையோடு என் நெஞ்சோரம் சாய்ந்தாளே.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: சலனம்
தோட்டத்து மல்லிகையும் தோல் சாய தவிக்குதடி உன் பிஞ்சு விரல் தீண்ட தலை சாய்ந்து நிற்குதடி மெல்ல நடந்து போ உன் மேனி பளபளப்பு கண்டு தலை சாய்ந்த பூவும் உன் மடிசாய அனுமதி கேட்டு வெப்ப சலனத்தில் தவிக்க போகிறது
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: கோவம்
என் உயிர் மூச்சேஎன்னை உந்திவிடும் மரகதமே நீ இல்லாத ஒருநிமிட வாழ்வை என்னால் வாழ முடியலையே இன்னும் ஏன் என்மீது கோவம்
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: கைம்மாறு
ஒரு ஏக்கருக்கு ஒரு நெல்லு காற்றோடு நின்னு பேசுவது போல் சோலை ஓரம் சேலை கட்டி என்னோடு வெயிலில் நின்னு பேசும் இனியவளே உன் பாசத்திற்கு என்ன கைம்மாறு செய்வேன்.
- சோழநாட்டுகவிஞர்
Conclusion: இந்த பதிவில் நாம் காணும் அழகிய கணவன் மனைவி கவிதைகள் உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகிறேன்.
No comments: