பச்சரிசி
மாவு போல் உன் தேகம்
மனச
பஞ்சாய் அமுக்குதடி...
நெத்திலி மீனும் துள்ளுது
என் மனசோரம் நித்தமும் அது மின்னுது..
வாகைப்பூவாட்டம்
உன் அழகு வெற்றியில் ஜொலிக்குது
வாடை காற்றில்
எம் மனசு நார்நாராய் கிழிந்து தொங்குது
நீ மெல்ல நடக்கையில
என் உள்ளத்தில் நிலநடுக்கம்
என் உசுரே போனாலும் நீ தானே என் மயக்கம்.
அம்மி நீ அரைக்க
ஆட்டுக்கல் ஏங்குமடி
பொம்மி நீ சிரித்தால்
என் நெஞ்சோரம் பூவும் பூக்குமடி
ஓடாத
நதிக்குள்ள நீயும் நானும் ஓடலாமா
ஓய்வுக்கு
ஓய்வு கொடுத்து ஓடி ஆடி பாடலமா
குண்டுசி கொடுவா போல
உன் இதழ் குத்தி நிற்க
நின்னு பேசவா தொட்டு பார்க்கவா
கூறடி கூத்தின் பிம்பமே.
No comments: