தமிழ் காதல் ஹைக்கூ கவிதைகள்

தமிழ் காதல் ஹைக்கூ கவிதைகள்
Header Image

Introduction: இந்த பதிவில் அழகிய தமிழ் காதல் ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்

Admin_Siva
July 15, 2024

கவிதை: பொண்ணி

காலை வெயில் சேலை கட்டி பொத்தி வைத்த பிம்பம் பொண்ணி முகப்பொலிவில் பிரதிபலிக்குதே நித்தம்.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: ரோஜா

தேனீக்களே ஏக்கம் கொண்டு பொத்தி வைத்த பூவே உன் தோரனை தான் இந்திரன் இனிப்புக்கு விருந்தோ.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: பனி

மூடுபனி பந்தல் இட்டு புல்லாங்குழல் நீட்டி வைத்து அதிகாலை ஊதுதடி குயிலே ஈரக்காற்று நெஞ்சோரம் பாடுதடி மயிலே

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: யானை

ஆனைமலை ஏத்தும் மெல்லாம் உந்தன் மேலே சில அதிசயங்கள் கூறுதடி காற்றுப்போல சோலைமலை சாரல் யாவும் சினுங்கி நிக்கும் குட்டி யானை மெத்தை கேட்டு பதுங்கி நிக்கும்.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: முனுகள்

சந்தார பூ சடங்கு ஆயி சந்தனமும் ஜவ்வாது பூசி வந்தால் நறுமணமும் கமழுமடி நாலு சுவத்துக்குள்ள முனுகள் சத்தம் கேட்கும்மடி காதுக்குள்ள காசிக்கு போறதுக்கு வேலையில்லை

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: ஊதல் வேட்கை

நீண்டு நிற்குதடி மூங்கில் காடு முன்னே பின்னே அதை உடைச்சி ஓட்டப்போடு ஓட்டையாவும் மெல்ல பொத்தி ஊதி பாரு உன் வேட்கை யாவும் தீரும் மடி பாட்டுப்பாடு

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: விரல்

ஐந்து விரல் அம்மாயி அழகப்பாரு அவள் கழனியில பட்ட கதை நீயும் கேளு நெட்டையான விரல்கள் யாவும் கரைந்துடுச்சி அது மண்ணுக்கு உணவாக மாறிடிச்சி.

- சோழநாட்டுகவிஞர்

Submit Your Quote

Quote submitted successfully! Your quote added above
Failed to submit quote. Please try again.

No comments:

Powered by Blogger.