சோழநாட்டுகவிஞர்
அழகிய தமிழ் ஹைக்கூ கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
July 6, 2024
பூவின் சமிக்கை நான் அறிவேன் இன்று ஏதோவொரு யுத்தம் விசித்திரமாக கண் விழித்து பார்த்தேன் மொட்டின் அறையில் அறிவியல் வகுப்பு பிரபஞ்சத்தின் தோற்றம் பூவிடம் இருந்து ஆரம்பமாம்.
தலைப்பு: மோகம் கவிதை
அடி ஆத்தி காட்டுத்தீயாய் பாய்கிறதே இவள் பார்வை இவள் நான் அறியாத சூரியனோ
தலைப்பு: பார்வை கவிதை
அது ஏனோ தெரியவில்லை பூவின் மடல்கள் என் நெஞ்சு மயிரை மட்டும் பிடித்து இழுத்து நித்தமும் கொஞ்சுகிறது
தலைப்பு: கொஞ்சல் கவிதை
அழகிய மீசை இல்லா பூனை குட்டி இரவில் மட்டும் நீ சிங்கமாய் உருமாறும் ரகசியம் என்ன?
தலைப்பு: பூனைக்குட்டி கவிதை
நதிகள் ஏரியின் முகப்பை நோக்கி பாய்கிறது கண்கள் அவளின் வனப்பை நோக்கி பாய்கிறது
தலைப்பு: வாலிப வயது கவிதை
பசுமை தரும் மகிழ்ச்சியை பருவம் ஏய்தவள் தருகிறாள் அவள் உள்ளே மறைந்து இருக்கும் அழகு ரகசியம் விடுதலை கேட்கிறது. .
தலைப்பு: வனப்பு கவிதை
தேடியதால் கிடைத்த அதிசயம் கீழடி நான் தேடி பிடித்த அதிசயம் பொற்கொடி
தலைப்பு: பொற்கொடி கவிதை
வறட்சியை விரும்பாத இதழ்கள் அவ்வபோது வசீகரித்தது தாகம் தீர்க்க மொட்டுகள் மலர்வது இரவில் இவளின் சினுங்கள் ஓய்வுவது பகலில் பால் வெண்ணெய் ஆகலாம் தேன் தேனீராய் ஆகலாம் இவளின் தேகம் மட்டும் வெப்பத்தில் கரையாத பனிக்கட்டி. தினமும் என்னை திருப்தி படுத்தும் முயல் குட்டி.
தலைப்பு: வாலிப அழகு கவிதை
நானும் பட்டாம்பூச்சி ஆனேன் அவள் முதல் முறை என்னை தீண்டிய போது தினமும் அவளோடு பயணம் செய்கிறது என் இரவுகள் அவள் தரும் உணர்வுகளை பனித்துளியாக பதித்து வருகிறது கடக்கும் பாதையில் இருண்ட நேரத்தில் அவளின் சேட்டைகள் எழுத முடியாத குறும்புதனத்தின் உச்சம் அவளிடம் மட்டும் ஏன் பரிதவிக்கிறது மனசு புரியாத புதிர் நதிக்கரையில் பூத்து குலுங்கும் பூக்களுக்கு தான் வெளிச்சம். .
தலைப்பு: தீண்டும் கவிதை
அவள் அழகை கண்டதும் பாற்கடலை மீண்டும் கடைய ஆரம்பித்தேன் இம்முறை அவளை எனக்கு மட்டும் சொந்தம் ஆக்க
தலைப்பு: கடைசல் கவிதை
பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் மறைவது உறுதி நான் மட்டும் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் அவள் அழகை மீண்டும் ருசிக்க. .
தலைப்பு: பிறப்பு கவிதை
தூரல் தீண்டிய பாகம் நித்தமும் நான் கீறல் போட வேண்டும் திசைகளில் வகை அறிந்து சுடு நீர் பீச்ச வேண்டும்
தலைப்பு: சுடு நீர் கவிதை
மேடு பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கை முந்தி செல்வது முக்கியம் இல்லை அவள் முந்தானையில் முகம் பதித்து மூச்சுவிட முடியாது இறுக்கி பிடித்து அவளையும் வெற்றி எனும் பாதைக்கு இழுத்து செல்ல வேண்டும்
தலைப்பு: வெற்றி பாதை கவிதை
Conclusion:
ஹைக்கூ கவிதைகள் எந்த விதமான மனதையும் சின்னதாய் தட்டி எழுப்பும் .
இந்த பதிவு நிச்சயமாக உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .