தலைப்பு: நீயும் நானும் பேசலாமா _காதல் ஹைக்கூ கவிதைகள்
முகப்பு: வணக்கம் என் தாய் தமிழ் உறவுகளே! இந்த பதிவில் அழகான முத்தான காதல் வரிகளை நீயும் நானும் பேசலாமா எனும் தலைப்பில் பதிவு செய்கிறேன் .
Admin_Siva
July 13, 2024
முத்தான முத்தழகி அழகை முடிஞ்சி வைத்த கருப்பழகி உன் கெத்தான பார்வையிலே நீயும் நானும் சேரலமா மூங்கில் ஓடை வரை பேசலமா?
ஈரம் சொட்டும் நெஞ்சுக்குள்ள குடை பிடித்து போறவளே நீ நானும் சாலையோரம் பேசலமா?
ஆடை மாற்றி வரும் முன்னே என் அழகை எல்லாம் படம் பிடித்த ஜோடிக்கிளியே நீ நானும் மாடி ஓரம் பேசலாமா?
சொக்க வைக்கும் சின்னப்புள்ள சிட்டெறும்பு கன்னிப்புள்ள கண் மூலம் மின்சாரம் பீச்சும் இனியவளே நீ நானும் மதில் ஓரம் பேசலாமா?
நின்னு பேசுனா ஊரோ துதிப்பாடும் என்று மறைந்து பேசும் இனிப்பான நறுமுகையே நீ நானும் புதர் ஓரம் பேசலாமா?
தீக்குச்சி வெப்பத்தை பொத்தி வைச்ச கன்னிப்புள்ள ஓரமா போறப்ப ஒரசி என்ன போறவளே நீ நானும் மரத்தடியில் பேசலாமா?
உன் கண்ணோ கருப்பட்டி காந்த நிற இனிப்பு ஊட்டி இனிப்பை பரிசலத்த இனியவளே நீ நானும் இரவில் பேசலமா?
நித்திரையும் வந்துடுச்சு நிலவும் கதை கேட்க நெருங்கிடிச்சி விடைப்பான வித்தக்காரி நீயும் நானும் விடியும் வரை கதை பேசலமா?
பட்டாசு போல் வெடிப்பவளே பார்வையில் நெஞ்சில் விதைப்பவளே பூத்தாடும் பூவ்விந்தி தேனே நீயும் நானும் பூவில் ஒழிந்து பேசலாமா?
கண்ணாடி பொம்மை போல வெள்ளையா இருப்பவளே தேனீர் சுவையாட்டம் சொக்க வைத்த இளந்திரலே நீயும் நானும் தேர் ஓரம் பேசலாமா?
மெழுகு சிலைப்போல நிற்பவளே கொஞ்சி கொஞ்சி பேசுபவளே தண்ணீர் ஓடையில் நீயும் நானும் நீந்தி கொஞ்சம் பேசலாமா?
மெத்தைக்கு போட்டியா மேனிக்கு பியூட்டியா ஸ்விட்சர்லாந்து சில்க் ஸ்மிதா போல இருப்பவளே நீயும் நானும் ஏர்போர்ட் ஓரம் பேசலாமா?
உன் கருப்பட்டி பேச்சுக்கும் உன் கவிப்பாடும் கண்ணுக்கும் உன் இதழ் ஓரம் கரையலாமா? இமைக்காமல் பார்த்து பேசலாமா?
நீயும் நானும் சந்திப்போமா ஏக்கம் தீர பேசிப்போமா வாழதா வாழ்வை வாழ்ந்து தீர்க்கலாமா?
கேள்வி
நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகத்தின் பெயர் என்ன?:
உங்கள் கவிதையை இங்கே பதிவு செய்யுங்கள் உறவுகளே!
Total Quotes in the post:
14
No comments: