Tamil Kavithaigal : சந்திப்பு

சோழநாட்டுகவிஞர் - Home

சோழநாட்டுகவிஞர்

சந்திப்பு கவிதை

Introduction:

காதலன் காதலி சந்திப்பு கவிதை உங்கள் மனதில் ஓர் உன்னத உண்மைகளை கடத்தும் என்று நம்புகிறோம்:

Admin_Siva
July 4, 2024

"சாலையோர சோலை யாவும் சேதி சொல்ல நீயும் நானும் சந்திப்போமா... ."
"சோலையோர பூக்கள் யாவும் ஏக்கம் தீர நீயும் நானும் சந்திப்போமா... ."
"பால் வண்ணநிலவே பழந்தமிழர் நினைவே பூவாடை வீசும் பூச்சர அழகே ."
"மந்திப்பொழுதும் சாயுதடி மனிக்குயிலும் கூவுதடி மானே நீ மெல்ல வருவாயா பூவின் ஏக்கம் தீர தேனை தருவாயா? ."
"நெருங்கி வந்தால் விலகி ஓடும் வெள்ளை மானே இன்று ஒருநாள் மட்டும் நீயும் நானும் சந்திப்போமா.....? ."
"கட்டழகு காவியமே கருமை நிற ஓவியமே கண்ணால் கவிப்பாடும் கண்ணகி வடிவம் கொண்டவளே...?? ."
"சித்திரையும் வந்துடிச்சி சில்லுனு வெயில் சுட்டுச்சி கருத்த தேகம் மட்டும் கங்காய் கொதிக்குதடி... ."
"மணக்கும் சந்தனமே கமகமக்கும் வெட்டிவேரே நித்தம் நான் அள்ளி பூச என் உறவாய் வருவாயா? ."
"கருத்த மச்சானுக்கு நீ கருப்பட்டி தருவாயா? ."
"சம்மதித்து தந்துவிடு _ என் சபதத்தை நீக்கிவிடு ."
"பெண்ணே நீ இதைமட்டும் செய்து விட்டால் ஓடை நீர்த்தேக்கம் உடைப்பட்டு ஓடும் இரு கரையோரம் நீரும் நுரைப்பொங்க பாடும் ."
"மெல்லிசை கேட்குமடி... மேனி முழுவதும் கூசுமடி கருப்பாயி கண்ணத்தில் அச்சிட்ட கருப்பட்டி மீண்டும் புத்துயிர் ஆகுமடி.... ."
"என்னடி ஊட்டி மலைப்பயிரே ஒருமுறை மட்டும் நீயும் நானும் சந்திப்போமா ."

Conclusion:
காதலன் காதலி சந்திப்பு என்பது என்றும் இனிமை தரும் ஓர் உன்னத சந்திப்பு.

© 2024 சோழநாட்டுகவிஞர். All rights reserved.

No comments:

Powered by Blogger.