
Introduction: இந்த பதிவில் அழகிய கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
July 17, 2024
கவிதை: தேன் மடல்
மாலையில் பூ விரியும் மனசோரம் நீர் வடியும் பத்த வச்ச நெருப்பு ஒன்னு விட்டு விட்டு தான் எரியும் ஒத்த நாழிகைக்குள் ஒரு ஆயிரம் நீர் துளியும் மிச்சம் இன்றி ஒடுமடி விரிந்த பூவின் தேன் மடல் அதை ஈர்க்குமடி.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: பூவின் காம்பு
தென்னை ஓலைக்குள்ள பூத்து நிற்கும் பூவே நீ அந்தி சாய்ந்து என் ஆசைக்கு ஆறுதல் கூறுவது எப்போது. நெட்டையான காம்பு ஒன்று உனக்காக காத்து இருக்கு பூவே நீ ஓலையை விடுத்து வீட்டுக்குள் வருவது எப்போது?
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: வலிகள்
வலிகள் எல்லாம் சில காலம் தான் அதற்காக யாரிடமும் நீ வசைச்சொற்கள் வீசாதே பொருத்துக்கொள் உனக்காக கடவுள் படைத்த உன்னத வாழ்வு மிக விரைவில் உன்னிடம் வந்து சேரும்.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: சிந்தனை
அறுபது ஆயிரம் சிந்தனைகள் ஒரு நொடியில் உன் மனம் யோசிக்கும் ஆற்றல் கொண்டது நீ உன்னை வலுப்படுத்தும் போது மட்டுமே உன்னால் தெளிவான ஒரு சிந்தனையை பெற முடியும் என்பதை மறவாதே. .
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: புதுத்தேன்
பூவோடு பூ உரச புதுத்தேன் தான் ஒழுக ரெக்க விரித்து ஆடும் வண்டும் அப்ப அப்ப பூவை குத்தி கிழிக்க மென்மையான பூவின் மடல் வேதனையில் கண் சுருட்ட வெறுமனே வெறுப்பதா வேகம் கொண்டு இழுப்பதா ஏதும் தெரியாமல் பூத்து கிடக்கு பூ ஒன்று. .
- சோழநாட்டுகவிஞர்
No comments: