வாழ்வியல் காதல் ஹைக்கூ கவிதைகள்

வாழ்வியல் காதல் ஹைக்கூ கவிதைகள்
Header Image

Introduction: இந்த பதிவில் அழகிய வாழ்வியல் காதல் ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்

Admin_Siva
July 15, 2024

கவிதை: உரம்

மலராத பூவும் தோட்டத்தின் மண்ணுக்கே உரம் ஆகும்.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: துரோகம்

இன்று நீ செய்த காரியத்தை நாளை நீ உணர்வாய்.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: நடிப்பு

இல்லாதவன் வயிற்றில் அடிக்காதே இருப்பவனிடம் அன்பாய் நடிக்காதே

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: விதைப்பு

மரணத்தின் உச்சியில் ஒருவன் நிற்கும் போதும் நீ அவனுக்கு துரோகத்தை விதைக்காதே. .

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: அடுப்பங்கரை

பெண்களின் பல துயரங்களை தாங்கி நிற்கும் தாய் வீடு.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: பிஞ்சு

மாமரத்து பூவுலகில் மிதக்குதடி தங்கம் _அதை ஆடி காத்தும் அப்போ அப்போ வந்து நின்னு கொஞ்சும் .. வெட்கத்துல சேலை கட்டி ஆடுதடி காம்பு வேதனையில் வாடுதடி சின்ன மா பிஞ்சு.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: வாழ்வில்

நித்தமும் ஓடி ஓடி உழைத்தாலும் நிம்மதி வாழ்வில் இல்லை ஏன் பிரம்மா

- சோழநாட்டுகவிஞர்

Submit Your Quote

Quote submitted successfully! Your quote added above
Failed to submit quote. Please try again.

No comments:

Powered by Blogger.