சோழநாட்டுகவிஞர்
காதல் பல்லாங்குழி ஆட்டம்
Introduction:
காதலும் இன்பமும் ததும்பும் இன்ப கவிதை: காதல் பல்லாங்குழி ஆட்டம்
Admin_Siva
July 1, 2024
"அழகு பிறையே நிலவின் திரையே புஞ்சை நிலம் அழகு உடுத்தி நஞ்சை நில நிகராய் வந்தவளே... ."
"அள்ளி பருக ஆசையடி சொல்லி அணைக்க துடிக்கும் மீசையடி ."
"நெத்தி மீது பொட்டு வைத்து நேர் வகுடு தான் எடுத்து மெல்ல சினுங்கி நடப்பவளே... ."
"உன் கூந்தல் அசைவுக்கு சொக்கி கிடக்கும் என் மனச என்ன செய்ய போற... ."
"நேசம் ஊட்டி வளர்ப்பாயா பாசம் ஊட்டி அழைப்பாயா ."
"வரவா வந்து உன் காதேரம் கடிக்கட்டுமா? கூரடி கூறை பட்டு அணிந்தவளே... ."
"தாகம் தீர்க்க உன் தீர்க்க தரிசனம் தருவாயா முல்லை கொடியே முலைப்பால் சிட்டே .. ."
"முகி மூலம் என் மனதில் முலாம் பூசும் தேன் நிலவே .... என் வனப்பான குறிஞ்சி திணைக்கு உரிய கிழங்கே ... ."
"என் செழிப்பான முல்லை திணைக்கு உரிய வரகே ... என் துடிப்பான மருதம் திணைக்கு உரிய நெல்லே ... ."
"என் இனிப்பான நெய்தல் திணைக்கு உரிய உப்பே .. மெளனம் கலைப்பாயா? இளமை தொலைப்பாயா? ."
"காதல் பல்லாங்குழி ஆட்டம் ஆடும் இளந்தரையே இம்மி உகந்து அம்மி மிதிக்க நாம் கூடலாமா? ."
Conclusion:
காதல் என்றாலே பல்லாங்குழி ஆட்டம் தானே இதில் ஆண் பெண் இருவருக்கும் இன்பம் தான் , காதல் ஒரு அழகியல் ஓவியம் அதை நித்தம் தீட்டுங்கள்.
No comments: