Introduction:
வணக்கம் என் அன்பு உறவுகளே
உங்களுக்காக இனிய காதல் ஹைக்கூ கவிதைகளை எந்த பதிவில் பதிவு செய்து உள்ளோம் .
வாருங்கள் அழகிய ஹைக்கூ கவிதைகளை காண்போம்.
Admin_Siva
July 12, 2024
அழகிய தேகம் உடையவளே அந்தப்புர அசைவு உடையவளே பதினெட்டு வருடம் பதுக்கிய அழகு வெடித்து சிதறியதே காதல் கட்டவிழ்ப்பில்
தீவுக்கு வெளிச்சம் இல்லாத பொழுதுகள் தீவுகள் உன்னையே அழைக்கிறதே நீ என்ன நிலவின் பிம்பமா?
கண்ணாடி கண்ட அழகை நானும் காண வேண்டும் உன் வீட்டு கண்ணாடியாய் நான் மாறவா.
மனசுக்கு என்னடி மகிழ்ச்சி நீ கிட்ட வந்தா மனசு துள்ளிக்குதிக்கிறது.
மேற்கே போகும் சூரியனை இருக்கி பிடித்துக்கொள்ளடி கிழக்கில் இருந்து நிலவென நான் பின் தொடர்வேன்
கொஞ்சும் போதும் பஞ்சு மாறி இருக்கிறாயே என் குற்றால இட்லி எப்படி?
கீரல் யாவும் நினைவை கூறும் சரி தான் நீ என்னடி நெஞ்சுல கடிக்கிறாய் ? மெல்ல கடி அதன் உள்ளே நீ தான் இருக்கிறாய் .
கொடிக்கும் இடைக்கும் நடுவிலுள்ள நீண்டு ஓடும் நதியே என் ஏக்கத்தை அவளிடம் சொல்.
அருவியில் அழகாய் அணைத்தவாறே காதோரம் சினுங்கி கூறினாள் ஐ லவ் யூ
சாரலுக்கும் தூரலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் பயணம் போல் அவள் பார்வைக்கும் அணைப்புக்கும் காத்து கிடக்குது வயசு.
கொஞ்சம மையிட்டு குங்குமம் சந்தனம் பொட்டு வைத்து குலுங்கி நீ போன கோபுரம் சாயுமடி.
எல்லாம் சரி இரவு மட்டும் ஏன் என் விழியில் உறங்குகிறாய்
போதும் என்று சொல் அவள் அழகு மட்டும்.
நெத்தியில பொட்டு வைத்து நுட்பமான வகுடு எடுத்து குத்தவைத்து வண்ணம் தீட்டி காதோரம் வலையல் சத்தம் என் நாசி வலி உட்புகுந்து மீசையை சுண்டி இழுக்குதே அலங்காரம் படுத்திய தேரே நீ சினுங்கி போவது எங்கே
காதல் மட்டும் ஏன் நிரந்தரமாக வலியை பரிசாக கொடுக்கிறது.
எனக்கானவள் நீ தான் உனக்காக காத்து இருப்பேன் நீ வருவாயா காதலியே
பார்த்ததும் பிடித்து விட்டது பழகி பார்த்ததும் கசந்து விட்டது
எனக்காக நீ ஏதும் செய்ய வேண்டாம் நீ என்னை வசியம் செய்யாமல் இரு உன் பார்வையில் இருந்து
காத்து வீசும் திசையெங்கும் உன்னை தேடி திரியும் காத்தாடி நான்
எனக்காக இம்முறை மட்டும் இசைந்து குடு நான் பிறப்பின் ரகசியம் அறியவேண்டும்
காகிதங்கள் அவள் பெயரை மட்டும் ஆரத்தழுவிக்கொள்கிறது
முதல் பார்வையில் முழு உயிரையும் பரிசோதனை செய்து விட்டாளே பாதகி.
நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை நித்திரை எல்லாம் உன் நினைவுதான்.
உன்னை ரசிக்கவே ஒரு யுகம் வேண்டும் உன் கண்ணில் நெளியும் அழகை ரசிக்க பல யுகங்கள் வேண்டும்
என் நினைவு எல்லாம் நீ தான் உன்னை தவிர வேறு யாரும் இல்லை உயிரே
காதல் வயப்பட்ட வயசு வரும் சரி காதல் வயப்பட்டால் ஏன் அழகு வருகிறது.
நீ ஏனடி இவ்வளவு இனிப்பாய் இருக்கிறாய் அரும்பு மலரீ போல் அழகாய் மனசு முழுக்க வியப்பாய் ஏன் இவ்வளவு இனிப்பு.
மெளனமாக நின்றேன் அருகில் வந்தால் மெல்லமாய் சிரித்தாள் காரணம் கேட்டேன் காதல் என்றாள்
அவள் தான் வேண்டும் என்று அடிமனதில் போராட்டம் முடிவில் வெல்லுவது அவளே
ஆரத்தழுவும் அவள் அன்பே இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்த பெரும் கொடை.
கண்ணாடி கூட நம்மை பிரதிபலிப்பு செய்ய காலம் எடுத்துக்கொள்ளும் ... ஆனால் இவள் கண் சிமிட்டும் நேரத்தில் உள்ளுணர்வை வெளிப்படுத்திவிடுவாள்
No comments: