சோழநாட்டுகவிஞர்
பயணம் கவிதை
Introduction:
காதல் கவிதைகள் எழுதும் பொழுது சில உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் அது இயற்கையின் படைப்பில் மிக மிக அன்பான , வியப்பான ஒரு காட்சி. இந்த கவிதை காதலித்து கரம் பிடிக்க விரும்பும் இரு உயிர்கள் பற்றிய உன்னத கவிதை. :
Admin_Siva
April 6, 2024
"நேரமாச்சு நேரமாச்சு மணிக்குயிலும் வந்து நிற்பா மனம் விட்டு பேச நிற்பா.. ."
"சோலையோர பூக்கள் யாவும் ஏக்கம் தீர நீயும் நானும் சந்திப்போமா... ."
"சின்ன சிறிய புள்ள சிவாவுக்கு உரிய புள்ள சீமையே தூக்கி எறிந்து என்னை காண நிற்பாளே ."
"நேரம் கெட்ட நேரத்தில மாட்டு வண்டி கூட இல்ல மணிக்குயிலு என்ன நினைப்பாளோ கலங்கி போய் நிற்பாளோ? ."
"காட்டு வழி நெடுக நெஞ்சுக்குள் பெரும் பதட்டம் பனை மரம் ஓரம் நிற்பதாக சொன்னாளே... பனை ஓலை கூட ஆடலையே எந்த மரம் ஓரம் நிப்பாளோ!! ."
"இருளும் சூழ்ந்து நிற்க இனியவளும் தயங்கி நிற்க பொன்னான அவள் கரத்தை பொத்தி நான் அணைக்க....! மின்சாரம் தாக்கியது போல என் நெஞ்சோரம் சாய்ந்தாளே..!! ."
"கண்கள் யாவும் கண்ணீரில் நிரம்பி நிற்க முத்தான முத்தழகி முகம் பளபளக்க என் நெஞ்சோரம் அடித்தாளே ... திட்டி என்ன தீர்த்தாளே. ."
"கோவம் எல்லாம் சில நொடி தான் கோர்த்து என்னை பிடித்தாளே ஆசை தீர அணைத்த புள்ள மூச்சுக்காற்றை எரித்தாளே.. ."
"வாசம் வீசுதடி வனப்பான சோலையில.. மோகம் கூடுதடி முத்தழகு சேலையில.. ."
"இறுக்கி அணைத்து இதழ் ஓரம் பேசையில வேங்கை உடலுக்கு விருந்து ஒன்னு கேட்குதடி... காதோரம் சினு சினுங்க கயல்விழியும் சம்மதிக்க தீராத ஆசையெல்லாம் தீர்ந்ததடி காட்டுக்குள்ள... ."
"சோடிக்கிளி சொந்தக் கிளி ஆனபின்னே காட்டுக்குள்ள என்ன வேலை புது வீடு தேடி வந்து விட்டோம் ."
"முத்தான முத்தழகிக்கு பொட்டு வைத்து தாழி கட்ட அவள் அழகோ மஞ்சள் கயிற்றில் மணமணக்க ஏதோ சாதித்த உணர்வு என் உள்ளத்தில் சிறகு அடித்து பறக்குதடி. ."
"போதுமடி பொண் மயிலே பேராசை ஏதும் இல்லை என்னவளே நீ போதும் வேற ஒன்னும் தேவையில்லை. ."
Conclusion:
முத்தான சிந்தனைகள் சில உணர்வுகளை சீண்டி பார்க்கலாம், எனது கவிதைகள் சிறுகதைகள் வாசகர் உங்கள் உள்ளத்தை திறக்கும் என்று நம்புகிறேன்.
.
No comments: