சோழநாட்டுகவிஞர்
காதல் கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் காதல் பற்றிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
March 22, 2024
கண் உருட்டி காதல் நூல் தொடுத்து காத்து இருந்தேன் பெண்ணே
தோகைமலை அடிவாரம் தென்றல் கூட கவிப்பாடும் இனியவளே உன் வருகை கண்டு
பிரம்மன் படைப்பில் சிறந்த ஓவியம் நீ
உன் பாதம் முதல் கூந்தல் வரை அனைத்தும் ஈர்ப்பு விசை கொண்டதது என்பதை நீ என்னருகில் கடக்கும் போது உணர்ந்தேன்.
மல்லிப்பூ வாசனையும் சந்தனப்பூ வாசனையும் பன்னீர் வாசமும் ஒன்றாய் இனைத்து மணக்குதடி... பெண்ணே நீ கடக்கும் போது...
உன் கண்விழி ஈரம் சொட்டும் ரோஜா பூ உன் புருவம் பரவசப்படுத்தும் வேப்பம் பூ உன் நெற்றி வசீகரிக்கும் வாஞ்சைப்பூ உன் திறமை ஆச்சரியம் மூட்டும் அள்ளிப்பூ
அழகான பெண்ணே அன்பான கொடியே உன்னை காதல் கொள்ள உள்ளம் தவிக்கிறது உன்னிடம் எப்படி சொல்லுவேன்....
தைரியம் வந்தாலும் தயக்கமும் கூடவே வருகிறது இருந்தும் உன்னை காதலிக்க முடிவு செய்து விட்டேன்...
நீ ஏற்பாயா வெறுப்பாயா எனக்கு தெரியவில்லை...
இருந்தும் உன் மீது எனக்கு தீராத காதல்.
இந்த பிரபஞ்சத்தின் அழகியே காத்து இருக்கிறேன் உன்மேல் உள்ள காதலோடு கரம் பிடிக்க இடம் கொடுப்பாயா?
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
காதல் கவிதைகள் நமக்குள் ஓர் அதித இன்பத்தை சுரக்கும் சுரப்பிகள் தான் .
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .