சோழநாட்டுகவிஞர்
மனைவி பிறந்தநாள் கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் மனைவி பிறந்தநாள் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
March 31, 2024
தூரத்தில் பிறந்தவள் துயரத்தில் வளர்ந்தவள்🥀🥀
வறுமையின் உச்சத்தை பல வருடங்களாய் உணர்ந்தவள்🥀🥀🥀
பட்டினி பசி பஞ்சம் மகிழ்ச்சி துயரம் தோல்வி வாழ்வின் பரிணாமத்தை பல வடிவங்களில் பார்த்து அனைத்தும் அறிந்து அமைதியாக வளர்ந்தவள் 🥀🥀🥀🥀
எங்கோ பிறந்து எனக்காய் வந்த என் இனியவள்🌹🌹🌹
நான் ரசித்த என்னவள்💐💐💐 நான் சுவைத்த என்னவள்💐💐💐 நான் நேசிக்கும் என்னவள்💐💐💐 நான் காதலிக்கும் என்னவள்💐💐💐
ஒன்றும் தெரியாத என்னை நம்பி வாழ்வை ஒப்படைத்தவள்💅
பாசத்தால் என்னை கட்டி போட்ட மனைவி என்னை அழகு படுத்தும் அழகுராணி💅
அவள் முத்துப்போல் இருக்கும் சிரிப்புக்கு நான் இன்றும் அடிமை🙎
அழகு தேவதை நீ நிலவின் வெளிச்சம் நீ💁
என் அன்பானவளே எனக்காக இந்த பிரபஞ்சம் வழங்கிய உதிரமே..! உடலை கொடுத்து உறவாய் மலர்ந்த பூவே🌺
வெற்றிட ஓடையில் வெள்ளம் வந்தது போல் என் வாழ்வில் வசந்தம் வீச வந்தப்பூவே🌺🌾
"வாடிய பயிர்களை கண்ட போது வாடினேன்" எனும் வள்ளலார் கூற்றுப்படி
என் வாடிய வாழ்க்கைக்கு நேசம் கொடுத்து என்னை காக்க வந்த என் குலவிளக்கே🪷🪷
முத்தான முத்தமிழ் முத்தான செந்தமிழ்🏵️
என் நெஞ்சுக்குள் வாழும் என்னவள் என் இளமைக்குள் வாழும் இனியவள்
கணவன் எனும் பட்டத்தை பரிசு அளித்த கள்ளி வாழ்க்கைக்கு துணையாய் வந்த துணைவி
ஆண்டில் பல நாட்கள் உண்டு ஆனால் இந்த நாள் இனிய நாள்
ஏன் தெரியுமா?
என் மனைவிக்கு பிறந்தநாள்.
தலைப்பு:மனைவி பிறந்தநாள் கவிதை
Conclusion:
அழகிய மனைவி பிறந்தநாள் கவிதை.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .