சோழநாட்டுகவிஞர்
கணவன் மனைவி கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், கணவன் மனைவி உறவு கவிதை மனைவியை அழைத்து கொண்டு உல்லாச பிரயாணம் ஆரம்பித்த கணவனின் கற்பனை வரிகள், உங்களுக்கு எனக்கும் ஒரு மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த உரையாடல் இருக்க போகிறது... வாருங்கள் நாமும் இனைந்து படகு சவாரி செய்வோம். கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது என்று கணவனின் கற்பனை வரிகள்....
Admin_Siva
March 21, 2024
"உனக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமையின் ஓடம் நம் காதல் "❣️...
வா என்னவளே இனைந்து பயணிப்போம் அகண்ட இந்த பார்கடலில்
இப்போது நமக்கு புரிகிறது இந்த பயணம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடக்கும் கணவன் மனைவி கூத்து...
வாருங்கள் அவர்கள் காதல் பயணத்தில் நாமும் இனைந்து பயணிப்போம்...
"அங்கே பார் அழகான நீரோடை அதில் சின்ன சின்ன மீன்கள் உன் அழகுக்கு தலைசாய்க்கும் நிகழ்வை பார்"...❤️
கொட்டி தீர்த்த மழைத்துளி யின் முக சிரிப்பை பார் ஏதோ பெரும் கடலில் அழகி தவழ்ந்து வந்தது போல் உன்னை வரவேற்கும் காட்சியை பார்
பெரும் கடலில் நீயும் நானும் ஆதாம் ஏவாள் நீ தயக்கம் கொள்ளாதே பார் கடல் உன் அழகை ரசிக்க நீண்ட அலையாக துடிக்கிறது இடம் தந்து விடாதே நான் மட்டும் தனிமையில் ரசிக்கும் ஓவியமே பத்திரமாக வைத்துக்கொள் உன் பெண்ணழகை...
"ஏதும் பேசாமல் மெளன சிரிப்புடன் நிமிர்ந்தாள்... நிலவு கடலுக்குள் வந்ததாய் உணர்ந்தேன்"...
உன் காதோரம் வீசும் உப்பு காத்து உன் வாசம் வீசுதடி
வாடாத இளமை வெப்பத்தில் காயுதடி என் நெஞ்சோடு இருப்பவளே பன்னீர் பூவே மொத்த பயணத்தில் ஒத்தை சிரிப்பை பரிசு அளித்த கொடியே
இந்த பயணம் நம் காதல் உணர்வின் மென்மையான தருணம்
யாரும் இல்லாத கடல் நம்மை சுமக்கும் ஓடம் ஒளி வீசும் தளீர் தத்தி ஓடும் தவளை அங்கும் இங்கும் ஓடும் நீர்த்துளி என் நெஞ்சோடு நீ உன் கண்ணோரம் நான்
நிலவு படம் பிடிக்க நட்சத்திரம் சிரித்து நிற்க உன் கைவிரல் பிடித்து உன் மடிமீது சாய்ந்து உன் மலர்விழி முகம் கண்டு மகிழ்ந்த இத்தருணம் என் வாழ்வில் முதல் நாள் துவக்கம்.💞
தலைப்பு: கணவன் மனைவி உறவு கவிதை
Conclusion:
இந்த பிரபஞ்சம் வழங்கிய ஒரே வாழ்வு இது தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே வாழ பழகுங்கள்.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .