சோழநாட்டுகவிஞர்
தாய் மனைவி கவிதை
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் மனைவி தாயாக மாறிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
March 29, 2024
நெஞ்சம் எனும் தோட்டத்தில் தஞ்சம் என்று வந்தவள்..❤️
மஞ்சம் எனும் மனசுக்குள் மனைவி என்று வந்தவள்..❣️
அவள் வந்த நாள் முதல் என் வாழ்வில் வசந்த காற்று வீசியதே💕
அவள் வசீகரிக்கும் வனப்பான இளஞ்சோலை அவள் பார்வையில் இளஞ்சோலையும் பூ பூக்கும் 🌹
யார் உறவும் இன்றி தனியே வாழ்ந்த எனக்கு அவள் தான் முதல் உறவு💞
இனிப்பானவள் இனிமையானவள் இமை பொழுதும் என்னை விட்டு விலகாதவள்....!!!!🫂
பாசம் எனக்கு அவள் தந்த பரிசு நேசம் எனக்கு அவள் தந்த முரசு💟💟
நித்தம் முரசு சத்தம் போல் அவள் பாசமும் நேசமும் எனக்கு மன அமைதி தரும் சுகமே🫶🫶
பெண் விரும்பாத ஆபரணம் இல்லை இவள் விரும்பிய ஆபரணம் நான் தான்🧒🧒
பாசத்தால் கொஞ்சும் பொழுது பச்சிளம் பிள்ளை போல் இருப்பாள் நேசத்தால் வருடும் பொழுது பசிக்கு அழும் பிள்ளைப் போல் ஆவாள் ...
கெட்டிக்காரி கோவக்காரி பள்ளி படிப்பு முடிந்ததும் என்னோடு வாழ வந்தவள் என் மனைவி....💏💏
என்னை விட பத்து வயது சிரியவள் ஆனால் சிந்தையில் என்னை விட பெரியவள்
ஒன்றும் தெரியாமல் வாழ்ந்த எனக்கு ஒரு தாய் போல் அனைத்தும் சொல்லிக்கொடுத்தாள்..
தீர்க்க முடியாது என்று நான் நினைத்த காரியங்கள் என் மனைவியின் அறிவின் மூலம் அழகாய் தீர்ந்தது
பெண் ஆகச் சிறந்த புத்திசாலி என்னவளும் அப்படி தான்💃💃
இந்த பிரபஞ்சத்தில் நான் செய்த புண்ணியமோ என்னவோ இவள் என் மனைவியாக கிடைத்தது
எல்லோரும் தன் தாய் போல் மனைவி வேண்டும் என்று விரும்புவார்கள் ஆனால் என் வாழ்க்கையில் நான் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை💟
நான் ஆசைப்பட்டாலும் எனக்கு இதுவரை நான் விரும்பியது கிடைத்ததும் இல்லை
பெரிய குடும்பத்தில் பிறந்த நான் வளர வளர குடும்பத்தின் பாரத்தை சுமக்க நேரிட்டது
குடும்பத்தின் சுமையை தன் இலக்காக வைத்து வாழ்பவனுக்கு ஆசை ஒரு கேடு தான்.
என் மனம் பாலைவன சோலையாய் கிடந்தது நெடுநாட்களாக...! அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த திருமணம்
வாழ்க்கையில் கஷ்டங்களும் சண்டைகளும் சச்சரவுகள் மட்டுமே பார்த்து வளர்ந்த எனக்கு. என் மனைவி எப்படி இருப்பாள் என்னை என் தாய் போல் பார்த்து கொள்வாளா என்ற பயம் என் உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது
"துணைக்கு யாரும் இன்றி தனியே ஓடும் நதி போல தான் நான்"
என்னை நேர்த்தி படுத்தியவள் என் மனைவி
எங்கள் வீட்டு ஒற்றுமையின் புள்ளி என் மனைவி....!❤️
ஆயிரம் வலிகள் யாருக்கு எங்கள் வீட்டில் இருந்தாலும்.... என் மனைவிதான் மருந்து.💕
பசுமையானவள் நேர்மையானவள் கள்ளம் கபடம் அற்றவள் விட்டு கொடுக்கும் மாண்பு உடையவள்...
இவள் வளர்ந்த வாழ்வை வளர்ப்பை படம் பிடிக்க முடியாமல் போனது பெரும் குற்றம்.
இன்று இவளின் ஒவ்வொரு அசைவும் எங்கள் வீட்டில் வெண்பாக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது
மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் இவள் வளர்ப்பே என் பொது முறை நூல்.
பல விசயங்கள் கற்றுக்கொள்ள எனக்கு என் அம்மா பார்த்த பெண் அவள் மீண்டும் எனக்கு இன்னொரு தாயாக வருவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
" பிள்ளை ஏன் அழுகிறது என்று தாயுக்கு தெரியும்"
அப்படி எனக்கு எது தேவையோ எனக்கு எது தேவையில்லையோ அனைத்தும் பார்த்து என்னை அன்புடனும் ஆசையுடனும் ஆக்கத்தோடும் அறிவோடும் வளர்க்கும் பெண் எனும் பெயரில் இருந்து விடுத்து மனைவி எனும் உறவில் இனைத்து தற்போது தாயாக மாறி நிற்கும் என் உயிர் மனைவியே
"நீர் இன்றி அமையாது உலகு" வள்ளுவர் கூற்றுக்கு இணையாக "நீ இன்றி அமையாது என் உலகு" என்பதே என் கூற்று.
தலைப்பு:தாய் மனைவி கவிதை
Conclusion:
இந்த பிரபஞ்சம் வழங்கிய ஒரே வாழ்வு இது தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே வாழ பழகுங்கள் எந்த மன மாற்றம் இல்லாமல் இனைந்து சந்தோஷம் பொங்க வாழுங்கள்.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .