சோழநாட்டுகவிஞர்
பெண்பிள்ளை என்பது வரம் கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் பெண் பிள்ளைகள் பற்றிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
March 22, 2024
பெண் பிள்ளை என்பது வரம் தவம் கிடந்து நீண்டகால மருத்துவர் போராட்டம் முடிந்து முதல் குழந்தையாய் பிறந்தாள் என் பொண் மகள்....!!
சந்தோஷத்தின் உச்சத்தை உணர்ந்த நாள் என் மகள் பிறந்தாள்
" ஆயிரம் உறவுகள் மத்தியில் என் இரத்தத்தால் பூத்த முதல் பூ "
உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி நான் துள்ளி குதித்தது இதுவே முதல் முறை...!! வானம் என் வசப்பட்டு நின்னதும் என் அன்பு மகள் பிறந்த இன்னால்
" பிள்ளையே இல்லாத எங்களுக்கு உற்ற துணையாக பிறந்தவள்"
என் மனைவி வயிற்றில் பிள்ளை வைத்து வழி நெடுக உதவி கேட்டு வண்டி வண்டியாய் மாறி ஏறி கண்ணீரும் வேர்வையும் கஷ்டங்களும் பட்டு…
முள்ளைக்கொடி போல் முத்து நகைப்போல் அப்பனின் சாயலும் அம்மையும் சாயலும் ஒன்றாய் இனைத்து கருவரையை உதைத்து என் கை குடைக்குள் வந்த என் குறிஞ்சிப்பூ என் மகள்
முதல் மாதம் கண்விழித்து பார்த்தாள் இரண்டாம் மாதம் புன்னகை பூத்தாள்
மூன்றாம் மாதம் கண் உருட்டி தேடினாள் நான்காம் மாதம் பாடல்கள் கேட்டு அழுதாள்
ஐந்தாம் மாதம் ஆறுதல் தந்தாள் இப்படி மாதங்கள் ஓடியது என் மனிக்குயிலும் பாடியது பெற்றோர்க்கு பெண் பிள்ளை வளர வளர மகிழ்ச்சி தானே....
ஆனால் என் மகள் சிங்கத்தின் சாயலில் அறிவில் அனுபவத்தில் அப்பனை தூக்கி சாப்பிடும் அழகு மகள்..
எனக்கு பெண் பிள்ளை தான் ஏன ஏளனம் செய்தவர்கள் இன்று என் மகள் வளர வளர வாய் அடைத்து நிற்கிறார்கள்
தலைப்பு:பெண்பிள்ளை என்பது வரம் கவிதை
Conclusion:
இந்த பிரபஞ்சம் பரிசு அளிக்கும் அற்புதம் தான் பெண் பிள்ளைகள்
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .