சோழநாட்டுகவிஞர்
காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன :
Admin_Siva
March 31, 2024
காதல் பிரிவுக்கு பின் காதலர்கள் சந்தித்தால் என்ன செய்வார்கள்? முதலில் தோன்றுவது அவர்களின் பழைய நினைவுகள் தானே!
தலைப்பு: காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
பள்ளி பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காதல் உணர்வை பரிசு அளிக்கும் , இந்த காதல் சுகம் அறியாத மானிட சமூகம் உண்டோ
தலைப்பு: காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
பூக்களில் பல வகையான உணர்வுகள் இருப்பது போல் காதலில் பல வகையான உணர்வுகள் இருக்க தானே செய்கிறது.
தலைப்பு: காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
" பூவே உனக்காக காத்து நிற்கும் பூந்தென்றல் நான் தானே" தென்றல் வீசும் வேகத்தில் உன் வேர்வை வாசம் அறிந்தேன்" நீ என் அருகில் காத்து இருக்கிறாய் என்று அறிந்து கொண்டேன்.
தலைப்பு: காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
கண்கள் மூலம் காதல் செய்தேன் கயவர்கள் கூட்டரசு நம்மை பிரித்தது நானும் இவ்வுலகில் வாழ வழியின்றி பைத்தியம் ஆனேன் நீயும் என்னை தனிமையில் விட்டு சென்றாய், ஏன் இந்தபிரபஞ்சத்தில் பிறந்தோம் என்று வருந்தி வாழ்ந்து வந்தேன், என் மனம் பாலைவன சோலையாய் கிடந்தது என் அன்பே, இப்போது என் உடலோடு ஒட்டி நிற்கிறாய் இது நிஜமா நினைவா தெரியவில்லை இருந்தும் என் பாலைவனத்தில் ஒரு பூ பூத்தது போல் உணர்கிறேன்"
தலைப்பு: காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
என் முதல் கவிதை உனக்கு நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை என்னவளே மீண்டும் நாம் இனைந்த முத்தான இந்த நிமிடத்தை நம் வரலாற்றுடன் நெருக்கமாகப் பொருந்தி அழகு பார்க்க விரும்புகிறேன்.
சோலைக்கிளி தேடிவரும் தினம் தென்றல் காற்றும் பாடி வரும் "காசு பணம் தேவை இல்லை உன்மை காதல் மட்டும் போதும்மடி"
"நேசம் வைத்த பூங்கொடியும் என் நெஞ்சோரம் சாய்ய வரும்"
என்றோ என்னை விட்டு பிரிந்தவள் இன்று என்னருகில் "நேசம் தவிர்த்த சோலைக்கிளி மீண்டும் சொடியத்தான் தேடிவரும் அது வந்து செல்லும் இருப்பிடத்தை பத்திரமாக வைத்துக்கொள் " அடிக்கடி இப்படி அன்பால் அனைத்துக்கொள்.
கண்ணோடு கண் உறச காதல் செய்து தீர்த்தவளே.. ஏனடி இப்படி தவிக்கவிட்டு போனாய்...
என் ஆறுதலும் நீ என் அரவணைப்பும் நீ நான் அனுதினமும் உறவாடும் உரியவளும் நீ ஏனடி இப்படி தவிக்கவிட்டு போனாய் ..
யார் நம்மை பிரித்தாலும் நம் காதல் அழியாதே...
ஆத்திரத்தில் விட்டு போனாய் இப்போது காட்சி பாத்திரமாய் நிற்கிறோம்
நீ இருக்கிறாய் என்னருகில் நான் தவிக்கிறேன் ... தொடலாம் என்று தைரியம் வந்தாலும்
ஒரு தயக்கம் தடுக்கிறது மீண்டும் பழைய நிலைக்கு நம் காதல் மலருமா! நேசம் கொடுத்தவளே நெருங்கி வரலாமா! நிம்மதியான உறக்கம் உன் மடிமீது கிடைக்குமா!
ஏக்கத்தை தனிக்கலாமா இளநீர் பருகலாமா உரிமை இருக்கிறாத உண்மையில் நான் இருக்கிறேனா கூறடி
பெண் மலர் சமிக்கை
" ஏனோ தயக்கம் ஒருவகை மயக்கம் காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை" அன்பு காதலா ஆசை தீர என்னை தாங்கி நிற்கும் அன்பு கடலே...
காதல் பிரிவில் வாடிய மலர்கள் மீண்டும் துளிர்க்கிறது என்னுள் .
மீண்டும் என்னை தவிக்க விட்டு விடாதே
இழந்ததை மீட்கும் இன்ப பயணத்தில் வா நாம் இருவர் இழைப்பாருவோம்.
முல்லை திணைக்கு உரிய காதல் உணர்வே உன் காதல் இனிப்பு என் நெஞ்சோரம் இனிக்குதடி
சித்திரையில் பிறந்தவள் தினம் நித்திரையில் வருவது போல்
பல யுகங்கள் கடந்து கண்டேன் என் கண்ணெதிரே உன்னை. மீண்டும் ஒருமுறை தொலைக்க மாட்டேன் உன்னை, இனி என் பெரும் வாழ்வு உன்னோடு தான்.
"பூமி பந்தில் பூத்த மலர் புதுவாழ்வு தந்த புணர்ச்சி மலர்"
புனைதலும் சுவைத்தலும் புத்துயிர் பானம், காதல் போதை சொட்டும் இளந்தளிர் மோகம்.
தலைப்பு: காதல் பிரிவுக்கு பின் சந்திப்பு கவிதை
Conclusion:
தமிழ் கவிதைகள் ஒரு பெறும் தாக்கத்தை மனதில் விதைக்கும்.
காதலித்த பெண்ணை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.
எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: