சோழநாட்டுகவிஞர்
கிராமத்து பெண்ணழகி கவிதைகள்
Introduction:
கிராமத்தில் நடமாடும் பேரழகியை அவள் சினுங்கள் மூலம் கவிதையாக உங்கள் பார்வைக்கு:
Admin_Siva
March 15, 2024
கருப்பான கண்ணழகி கிறங்க வைத்து போறாளே... காதல் ஒளி வீசி கம்பீரமாய் போறாளே...
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
பட்டதும் பத்திக்கும் பார்வையில என் வாலிபத்த உசுப்பேத்தி போறாளே
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
அவள் அழகான பார்வைக்கு அள்ளி மலர் திரைப்போடும் அவள் செழிப்பான அழகுக்கு ஆத்து நீரும் ஓடிவரும்
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
செப்பேடு தந்த சிலை போல செந்தமிழ் தந்த சுவை போல தேனாய் இனிக்கும் தென்றல் காற்றும் அவளை ரசிக்கும்
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
அவள் முத்து போல் மிளிர நிலவும் நின்னு ரசிக்கும் இரவும் இன்பத்தில் துடிக்கும்..
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
என்னிடம் கோட்டையும் இல்லை அவளோடு நெடிய பழக்கமும் இல்லை இருந்தும் ஒத்த பார்வையில் மயக்கி விட்டாளே பாதகி...
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
கருப்பு கன்னியே கால் முளைத்த மானே உன் கண்கள் மூலம் காந்த புயல் வீசுவது காதல் உணர்வின் பெரும் வெடிப்பா.... கூறடி துள்ளி ஓடும் கிராமத்து பெண்ணழகி.
தலைப்பு: கிராமத்து பெண்ணழகி கவிதை
Conclusion:
கிராமத்து பெண்ணழகி என்பவள் அழகிலும் அழகு.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: