சோழநாட்டுகவிஞர்
கணவன் மனைவி கவிதைகள்
Introduction:
இந்த கவிதை கணவன் மனைவி இடையே இருக்கும் உறவை பற்றிய கவிதை:
Admin_Siva
March 1, 2024
உன் அழகான அன்புக்கு நிகர் ஏதும் உண்டோ இவ்வுலகில்...
எனக்காக இந்த பிரபஞ்சம் வழங்கிய முத்து சிற்பம் நீ....
உன்னோடு உரையாட நித்தமும் என் உள்ளம் ஏங்கும்
யார் உன்னை ஒதுக்கினால் என்ன... என் உயிர் இருக்கும் வரை நீயே என் ராணி
என்னை யாரும் நம்பாத இந்த உலகத்தில் என்னை நம்பி வந்தவள் நீ தானடி.
உன் கண்ணீர் கண்டால்... என் மனம் எனும் கடலும் கலங்கி நிற்கும் என்று அறிவாய் தானே...
ஏக்கம் வறுமை காயம் இவையாவும் எனக்கு வந்த போது என்னை தாங்கி பிடித்தவள் நீ தானே
உன் இருகரம் போதும் ... மீண்டும் நான் புத்துயிர் பெற
அன்பே ஆயிரம் கவலையோடு உழைத்து வீடு திரும்பும் போது உன் ஒத்த பார்வை என் துக்கம் நீக்குமடி..
கையில் ஏதும் இல்லாமல் இந்த வாழ்க்கை நாம் துவங்கினோம்...
அப்போதும் நாம் கலங்கியது இல்லை இனி காலம் முடியும் வரை நாம் கலங்க போவதும் இல்லை
தலைப்பு: கணவன் மனைவி கவிதை
Conclusion:
கணவன் மனைவி கவிதைகள் என்றாலே இன்பம் தானே.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: