சோழநாட்டுகவிஞர்
அம்மா கவிதை
Introduction:
இவ்வுலகில் நான் பிறக்க காரணமாக இருந்த அம்மாவின் கவிதை :
Admin_Siva
March 13, 2024
அம்மா கவிதைகள் எழுத படிக்க தெரியாத என் தாய்க்கு... நான் எழுதிய முதல் கவிதை "அம்மா"
தலைப்பு: அம்மா கவிதை
ஆயிரம் கவலையை சொல்லி முடிவில்.... முகம் மகிழ்ந்து சொல்லும் குறிஞ்சி பூ போல் என் கருவறையில் பூத்த பூ நான் என்று....!!
அதை கேட்டு ஏதும் அறியாத வயசு மெல்லமாய் சிரித்தாய் ஞாபகம் எனக்கு...
அம்மாவின் கைவிரல் பிடிக்க பத்து மாதம் காத்திருப்பு... அதுவரை என் தாயின் தொப்புள் கொடி தான் எனக்கு அரவணைப்பு...
தலைப்பு: அம்மா கவிதை
காலங்கள் என்னை என் தாயிடம் ஒப்படைக்க...
என் தாயோ மகிழ்ச்சி பொங்க அரவணைக்க தாய் பாசத்தின் சுகம் ... முதல் முறையாக உணர்ந்தேன்.
அன்று முதல் இன்று வரை என் அம்மாவே என் முதல் சாமி...
ஆனால் பாருங்கள்... என் அம்மாவிற்கு நான் தான் குலச்சாமி.
அம்மா நீ வெறும் வார்த்தை இல்லை... அம்மா நீ வெறும் உருவம் இல்லை... அம்மா நீ வெறும் மகிழ்ச்சி இல்லை.. அம்மா நீ வெறும் உயிர் இல்லை...
ஏதும் இல்லை எனில் நீ யார் என்று கேட்கிறாயா...
அம்மா நீயே என் உருவம் நீயே என் உயிர் நீயே என் வழித்தடம் நீயே என் சுவாசம் நீயே என் கடவுள் நீயே என் உலகம் நீயே என் முயற்சி நீயே என் நம்பிக்கை....
வார்த்தைகள் வர்ணிக்க முடியாத பெரும் ஆற்றல் கொண்ட என்னை படைத்த பெரும் கடவுள் நீயே அம்மா.
தலைப்பு: அம்மா கவிதை
Conclusion:
அம்மா உறவு இவ்வுலகில் நான் கண்ட தெய்வம்.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: