சோழநாட்டுகவிஞர்
கணவன் மனைவி கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் பெண்கள் பற்றிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
March 25, 2024
என் அன்பான கணவரே என்னருகில் வாருங்கள்
நீங்கள் நித்தமும் ரசிக்கும் அங்கத்தை பாருங்கள்
நீங்கள் என்னுள் கத்தியின்றி ரத்தம் இன்றி வரைந்த என் அடி வயிற்றின் கோடுகளை பாருங்கள்...
தாய் எனும் வரலாற்று புதினத்தின் பொக்கிஷத்தை பாருங்கள்
நீங்கள் கொடுத்த செப்பேடு என் அடிவயிற்றில் கோடுகளால் முலாம் பூசப்பட்டு கிடப்பதை பாருங்கள்
இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே
நீங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்
இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள பெண்கள் விரும்பும் மகிழ்ச்சி ஓவியம் இது தானே
பெண் தாயாகவும் கணவன் குழந்தையாகவும் மாறி நிற்கும் காட்சி அதற்கு என் அடிவயிற்றின் ஓவியமே சாட்சி .
கணவன மனைவி உறவு என்பது இந்த பிரபஞ்சம் கொடுத்த கொடை என் அன்பார்ந்த உறவுகளே முடிந்த வரை ஒற்றுமையாக வாழுங்கள்.
பெண் எனும் அழகியல் உணர்வுகளை அவள் சம்மதிக்க ரசியுங்கள் இந்த வாழ்வு பெரும் வாழ்க அமையும்.
தலைப்பு: தாய்மடி கவிதை
பகல் முழுவதும் காத்திருப்பு எப்போது அந்த இளமையின் ரகசியம் அறிவோம் என்று... இரவுகளும் வந்து அழைக்கும் இனிமையாக உறக்கம் அழைக்கும் கனவுகளும் வந்து தொலைக்கும் அதில் முத்தப்போர் நித்தம் நடக்கும்.
தலைப்பு: முத்தப்போர் கவிதை
வடக்கு வீதியில் வீற்றிருக்கும் சிவன் கோவில் தான் நான் நித்தமும் பூஜிக்கும் கோவில் ஏனோ இந்தமுறை அவள் வருகையால் அம்மாவாசையும் பெளர்ணமி ஆனது.
தலைப்பு: கோவில் தரிசனம் கவிதை
அவளின் வளைவு நெளிவு கூந்தலில் சிக்கி தவிக்கும் ரோஜா பூ போல் என் மனதும் அவளின் அன்பில் சிக்கி தவிக்கிறது நித்தம் கூந்தல் காவியம் படைக்கிறது
தலைப்பு: கூந்தல் கவிதை
அதீத பாசம் வந்து விட்டால் என்னவள் அடிக்கடி என் மார்பில் சாய்ந்து தான் நேசம் காட்டி பாசம் ஊட்டுவாள்
தலைப்பு: மார்பில் பாசம் கவிதை
Conclusion:
இந்த பிரபஞ்சம் வழங்கிய ஒரே வாழ்வு இது தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே வாழ பழகுங்கள்.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .