சோழநாட்டுகவிஞர்
காதல் கவிதை
Introduction:
தமிழ் காதல் கவிதைகள் உங்கள் பார்வைக்கு காத்து இருக்கிறது:
February 28, 2024
கன்னி மயிலே
கார் குழல் உறவே மீசையோடு மல்லுக்கட்டும் இளம்பிறை அழகே...
நெருப்பென மிளிரும் தங்கத்தேரே... ஆகாயத்தை தீ மூட்டும் அன்னக்கொடியே...
தென்றலை ஈர்த்து மணக்கும் பூஞ்சோலை ரதியே
உன் வாசத்தை திருடும் பூக்களில் நானும் ஒருவனடி...
உன் மகரந்தம் தொட்டு... மணக்கும் தேனை உறிஞ்சி தித்திக்கும் இதழ்கள் மூலம் சுவைக்க வேண்டும்
திகட்டாத வாழ்க்கையில் அனுதினமும் அதை நான் ரசிக்க வேண்டும்
நடக்குமா நடக்காத என்று தெரியவில்லை... ஆனாலும் நடந்தே தீர வேண்டும் என்று தீயாய் தவிக்குதடி எம்மனசு.
தலைப்பு: தமிழ் காதல் கவிதை
Conclusion:
தமிழ் காதல் கவிதைகள் என்றால் நமக்கு ஒரு உன்னத உணர்வை தூண்டும் என்பது அய்யம் இல்லை.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: