சோழநாட்டுகவிஞர்
மொழி கவிதைகள்
Introduction:
இந்த கவிதை தாய் மொழி தமிழின் அழகியல் பற்றியது
Admin_Siva
February 25, 2024
இளந்தமிழர் வீரம் இமயம் வரை போற்றுவோம்.... இன்னல் பல வந்தாலும் இனிதே போராடுவோம்....
இளநீர் தித்திப்பாய் எங்கள் தமிழ் இளைப்பாறிய சங்கீதம் எங்கள் தமிழ்...
முப்பால் கீதம் ... மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு....
கீழடியில் எங்கள் தொன்மை... ஆதிச்சநல்லூர் எங்கள் பழமை.... சோழ நாட்டின் அருமேடு எங்கள் வலிமை....
போர்க்களத்தில் துதிப்பாடும் பரிப்பாடல் வேளாண்மையில் நதிப்பாடும் நற்றிணை....
ஆத்திசூடிக்கு அறமாய் நிற்கும் முதுமொழி காஞ்சி....
எங்கள் மொழியில் இல்லாத இனிமை .... வேறு எங்கும் கண்டிரோ....
வீதியெங்கும் வித விதமான விளக்கின் ஒளி அதன் கூடவே வரி வடிவத்தில் ஆங்கிலம்....
அழிந்து வரும் எம்மொழியின் எச்சம்... அழுத கண்ணீரின் நீர்த்த உப்பு படலம்...
சங்கம் வைத்து காத்த மொழி... ஒரு சந்தில் கூட காணலையே
இனியும் நாம் நம் மொழியை காக்க விட்டால் நம் முன்னோர்கள் பட்ட கடன் வீண் தானே
விளிம்பு நிலை மொழியும் ஆறுதல் கேட்டு தவிக்கும் நிலை கரம் கொடுத்து காப்போம் நம் தொன்மையில் நடனம் ஆடும் நம் தாய்மொழியை.
தலைப்பு: மொழி கவிதை
Conclusion:
தமிழ் மொழி இவ்வுலகில் சிறந்த மொழி.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: