ஒத்தையில தவிக்குதடி மனசு

Tamil love Quotes - Home

சோழநாட்டுகவிஞர்

ஒத்தையில தவிக்குதடி கவிதைகள்

Introduction:

இந்த கவிதை காதலின் அழகியல் பற்றியது

Admin_Siva
February 25, 2024

ஒத்தையில தவிக்குதடி மனசு அழகாய் நீ சிரிக்க அள்ளி மலரும் மலர்ந்து நிற்க...

மெளனமாய் நீ கடக்க இதய பூவும் தளர்ந்து நிற்க...

போகாதே எனும் வார்த்தை பெரும் இடியாய் இதயத்தில் இடிக்குதடி...

உன் பொன் கரங்கள் நித்தமும் தீண்ட என் தேகமும் மயில் தோகை விரிக்குதடி

பொண்ணிறம் ஆனவளே.... பொற்கிழி அழகை தன்னுள் கொண்டவளே....

நீ விதைத்த பாசம் எனும் விதையெல்லாம் என் மனசில் விருச்சமாய் வளர்ந்து நிற்க

நீ அதை காணமால் போவது தாய்வழி மரபுச் சின்னம் தனிமையில் தவிர்க்கும்படி ஆகாத...!!

முந்நீர் முந்தி நிற்க கண்ணீர் பிந்தி நிற்க..

யாரும் இல்லாத ஒத்த படகாய்....

கடல்அலை தாலாட்ட கரும் மேகம் சீராட்ட ஒத்திசைவு பார்க்கலாம் ஒத்தையில தவிக்குதடி மனசு.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

Conclusion:
காதல் கவிதைகள் என்றாலே இனிப்பு தான்.

@Writing Siva✍️💕💕💕💕

Logo

எழுத்து சிவா✍️

WhatsApp Chat

Submit Your Favorite Quote

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.